முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
11. திருவெங்கையுலா
85    என்ன மழுமா னியைந்த விரலல்ல
     மன்னமணி யாழி மலிவித்துத் - தன்னொழியக்
     கைசெய்த வீரக்குக் கட்டியதாய் முற்றாமல்
     மொய்செய்த காலன் முரண்முருக்கி - மைசெய்த
     மேனி யரக்கன் விறலோர் கணத்தழித்து
     வானி னடுத்த மதிதேய்த்துத் - தானுடைய
     வென்றிக் கணிந்ததென வீரக் கழனோன்றாள்
     ஒன்றிக் கிடப்ப வொளிர்வித்து - மன்றற்
     புகைமுதனின் றேந்திநறும் பூங்குவளைத் தீப
     வகைமுதல் கொண்டுபணி மாறித் - தகைமை
(86)
90    வலக்க ணிடப்பா லிடக்கண் வலப்பாற்
     கலக்க நிழலாடி காட்டி - நிலக்கலமும்
     பொற்கலமு மன்ன மறையும் புகழ்மூவர்
     சொற்களையு மொத்துத் துதிப்பவிருந் - தற்கதிர்தன்
     அங்கந் திரண்டமுத தாரையொழுக் கானதெனத்
     தங்கு மணிப்பிடிய சாமரைகள் - அங்கசையச்
     சாந்தாற்றி பேர்முரணித் தாமரைமுத் தன்னவெயர்
     போந்தாற்றி ஞாங்கர்ப் பொலிவெய்த - வேந்தாற்றற்
     பிள்ளை மதியினைமுன் பெற்றெடுத்த தாய்மதிபோல்
     வெள்ளை மணிக்கவிகை மேனிழற்றத் - தொள்ளைவளை
(91)
95    ஒன்றா யிரம்வா யொலிக்கு மவைபோன்று
     சென்றா யிரமெண் டிசைவிழுங்கக் - குன்றாத்
     திரண்டா யிரங்கை தெழிக்குமது போற்கை
     இரண்டான் முழவொன் றிரங்க - மருண்டார்நல்
     தந்திகரங் கொண்டதென நற்றண் ணுமைமுழங்கச்
     சந்தமறை யோன்விழையுந் தாளங்கள் - முந்ததிரக்
     கண்ணன் மலர்வாய்க் கழையெறிந்து பின்றொடர
     வண்ண விசைக்குழல்கள் வாய்த்தொலிப்ப - மண்ணியங்கள்
     ஏனையபா தாளத் திறையரவும் விண்ணரவும்
     வானுருமே றென்ன மலிந்தார்ப்ப - மீன
(96)

86.85-90. மன்ன-பொருந்த. முரண் முருக்கி-வலிமையை அழித்து. மதி-திங்கள். நோன்றாள்-வலிமை பொருந்திய திருவடி. 91.90-95. நிழலாடி-கண்ணாடி; நிலக்கலம்-மண்ணாற் செய்தகலம். பொற்கலம்-பொன்னாற் செய்த கலம். மறை மண்பாத்திரமும் தேவாரம் பொன் பாத்திரமும் போன்றதென்க. “பூசுரர் நான்மறை மட்கலநிகர்க்கும்” என்பது நால்வர் நான்மணிமாலை. கவிகை-குடை. நிழற்ற-நிழலைச் செய்ய. 96.95-100. முழவு-மத்தளம். தண்ணுமை-ஒலிக் கருவிகளில் ஒன்று. கழை-வேய்ங்குழல். உருமேறு-பேரிடி.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்