முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
11. திருவெங்கையுலா
100   அலைப்புதல்வி போற்றபெரி யம்மைப் பெயர்கொள்
     மலைப்புதல்வி தன்கொழுநன் வந்தான் - தொலைப்பில்
     முதுகுன்றம் வெங்கையென முன்னுங் கருணை
     மதகென்ற கண்ணுடையான் வந்தான் - இதுகுன்றம்
     என்னு மழவிடையான் வந்தா னெனக்கோடி
     சின்ன மமுதஞ் செவிக்குகுப்ப - மன்னுசிவ
     செந்துவர்வாய் மங்கைபங்க தேவாதி தேவவென
     வந்திகர்நின் றார்க்குமொலி வானளப்பப் - பந்திமணி
     மாடக் கரைசேர் மறுகிலஞ்சி மன்பதையா
     நீடப் புதுநீர் நிறைந்தொலிப்ப - ஆடச்
(101)
105   சிலர்செந் தழற்கொழுந்து சேட்போய் விழல்போற்
     பலர்செந் துகிலெறிந்து பற்ற - மலர்சிந்தி
     உம்பர்மே னிற்ப வுலகநெருக் கரலுயர்த்த
     தம்பதுமக் கையெளிதிற் றாங்குவிப்பச் - செம்பொனெடுந்
     தண்டுமிசை கொண்டு சகமீன்றா டன்னையுடன்
     கொண்டுமணி வீதி குறுகியே - பண்டு
     சிலையாகி நொய்துபட்ட தீதகல மேரு
     மலையாகி நின்றவா வந்த - நிலையாகி
     நாரணனாய் விண்ணுயர்வா னன்னிறத்தாற் செங்கமல
     ஆரணனாய் மிக்க வணியினால் - வாரணனாய்
(106)
110   நின்ற பசும்பொ னெடுந்திருத்தேர்க் கண்டுவந்து
     மன்ற விளங்கதிர்போல் வந்தேறி - வென்றிதரு
     தந்தி முகன்முருகன் சங்கரிநற் சண்டியிவர்
     தந்த மரபிரதந் தாங்கடவி - வந்தணையக்
     கட்டளைக்கற் பொன்னுரைபோற் காற்பொன் மறுகுரிஞ்ச
     முட்டிமுடிப் பொன்விண் முகடுரிஞ்சப் - பட்டுடைத்தேர்
     கண்டோர் விழிகள் களிப்ப நிலைபெயர்த்துத்
     திண்டோ ளிறைவன் செலுத்துதலும் - பண்டோர்
     
     குழாங்கள்
     
     சிரந்துணித்தா னோடமர்ப்பச் சென்மதற்கு வேதன்
     இருந்து படைத்தபடை யென்னத் - திருந்திழையார்
(111)

101.100-105. 106.105-110. சேண்போய்-தொலைவிற்போய். உம்பர்-தேவர்கள். சிலை-வில். நாரணன்-திருமால். செங்கமல ஆரணன்-நான்முகன். வாரணன்-இந்திரன். 111.10-115. கட்டளைக்கல்-பொன்னுரைகல். காற்பொன்-தேர் உருளையின் பொன். மறுகு-தெரு. முடிப்பொன்-தேர்முடியின் பொன். முகடு-விண்முகடு. சிரந்துணித்தான்-நான்முகனுடைய தலையைக் கிள்ளியவன். அமர்ப்ப-போர் செய்ய. இருந்து-எண்ணி.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்