முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
11. திருவெங்கையுலா
115   முற்றினர்முற் றாதமுலையிற் பெருவாழ்வுஞ்
     சிற்றிடையி னல்குரவுஞ் சேர்ந்துளார் - முற்றும்
     அமைக்க நிகர்தோ ளணங்கா தலைத்தம்
     பிமைக்கம் விழியா லிறுப்பார் - சுமைக்கு
     வருந்து நுசுப்பென்று வாணுதலிற் றீட்டுந்
     திருந்து திலகஞ் சிதைப்பார் - பரந்தஞிமி
     றூதித் திரியும் பலமலரி னொண்மணம்போல்
     பேதித் தமையுமிகு பேரழகார் - மோதிக்
     கிழியா முகில்சிதைக்குங் கேதனப்பொற் றேரோன்
     அழியா வெரிதீ யழகை - விழியால்
(116)
120   விழுங்கினா ரேது விளையா தினிமெய்
     புழுங்கினார் மாலை பொரிந்தார் - செழுந்தரள
     மாலை பொடிந்துவிழி வார்நீர் கலந்தொழுகிப்
     பாலைபொழி யார்பா ரதிபோன்றார் - மேலைநாட்
     கூற்றை முனிந்த குரைகழலு முப்புரத்தின்
     ஆற்றல் களைந்த வணிநகையும் - போற்றிலராய்த்
     தம்மைநோய் செய்த தறுகட் சிலைமதற்காய்
     வெம்மை விழியே வியந்திடுவார் - செம்மைத்
     தவங்கொண்டோ மாதுமையா டன்னழகு கொண்டோ
     எவன்கொண் டிடமளித்த தென்பார் - தவங்கொண்டேல்
(121)
125   ஆக வழகா லளித்த திடமாகில்
     போகவிடே மென்றெதிர்தாம் போகுவார் - ஆகம்
     மருவு மதினெண் மடங்கு பிறைப்பேர்
     இரவி தனைமறைப்பி னென்பார் - பரவுறுபீர்
     கன்றுபயிர் மேயக் கடாவின் செவியரிந்தாங்
     கின்றுதலை வற்கா ணிணைவிழிகள் - நன்றிருப்பக்
     கொங்கை யழகழியக் கொண்டதென்பார் கொல்பவர்க்குச்
     சங்கரனென் னும்பேர் தகாதென்பார் - மங்கையுமை
     கொங்கைவடுக் கண்டுங் குழியவுரம் பாயாத
      எங்கண் முலைக்குவலி யில்லென்பார் - செங்குதலைப்
(126)

116.15-120. முற்றினர்-வந்து திரண்டனர். அமை-மூங்கில். அம்பு இமைக்கும்-அம்பைப்போல் விளங்கும். இறுப்பார்-ஆடவரை வருத்துவார்கள். நுசுப்பு-இடை. ஞிமிறு-வண்டு. 121.120-125 பொரிந்தார்-தீயப்பெற்றார். பாரதி-கலைமகள். மெய்புழுங்கினார்-உடல் வருந்தினார். அணிநகை-அழகிய பல். 126.125-130. ஆகம்-மார்பு. இரவி-கதிரவன். குழிய-குழி விழுமாறு. உரம்-மார்பு.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்