11. திருவெங்கையுலா |
|
|
130 பிள்ளைப் பழியாளர் பெண்பழியை யஞ்சுவரோ எள்ளத் தனையேனு மின்றென்பார் - உள்ளுக் குருகுவார் நெற்றிபுடைத் தோவிதியே யென்பார் பருகுவார் போலிறையைப் பார்ப்பார் - முருகுவாய் தங்கமுத மும்பெறார் தாழ்குழலிற் பூப்புனையார் எங்கள் விழிக்கிவர்தாம் யாரென்பார் - பங்குவரும் ஆர மணிமார் பணையக் கிடைத்தாலும் பார முலைக்ககலம் பற்றுமோ - நேருகினுங் கங்கையறி யாமற் கலக்கு மிமையமலை மங்கையறி யாமல் வருவரோ - மங்கை
|
(131) |
|
|
135 அறியாமற் கங்கை யணையு மவரென் நெறியால் வராரென்று நிற்பார் - குறியா இணைவிழியா னோக்கா ரெனினு நுதன்மேல் அணைவிழியா னோக்கினமா மென்பார் - கணைவிழியார் ஏந்திளங் கொங்கை யிடைவருத்தன் மாத்திரையாய்ப் போந்தன வென்று பொருமுவார் - நாந்தவஞ்செய் தில்லோ மதனா லினையாம லென்செய்ய வல்லோ மெனத்திகைத்தார் மற்றொருத்தி - நல்லோர் பேதை பொதும்பர் வனம்யாம் புகவோ மிவடான் பெதும்பையா முன்னமெனும் பேதை - குதம்பை
|
(136) |
|
|
140 விழிமேவுங் காதுதோண் மேவப் புனைவாள் மொழிமேவும் வீணை முனிவாள் - பழிமேவுங் கல்லார் பரன்முற் கரத்தல்போற் றன்கண்மூய் எல்லார் முனுங்கரந்தே னென்றிருப்பாள் - பொல்லாத வெம்பு பகையாகி மேல்விளைவ தோராமல் அம்புலியை வாவா வெனவழைப்பாள் - செம்பொனுயர் தெற்றிமிசை மென்னடைய தென்றல் வரவேற்றுச் சற்றுமுள மஞ்சாது தங்குவாள் - பற்றுதவு தன்பெருமை பொன்னறியாத் தன்மைபோற் பெண்ணரசாந் தன்பெருமை தானறியாத் தன்மையாள் - பொன்பரிவின்
|
(141) |
|
|
|
131.130-135. பிள்ளைப்பழியாளர்-சீராளனைக் கொன்று பழி தேடியவர். பருகுவார்-எடுத்து விழுங்குபவர். ஆரம் மணிமார்பர் - மாலைகளையணிந்த அழகிய மார்பையுடையவர். அகலம்-இறைவருடைய மார்பகலம். 136.135-140. கணைவிழியார்-அம்பைப்போன்ற விழியை உடையவர்கள். பொருமுவார்-மனங்குமுறுவார்கள். இனையாமல்-வருந்தாமல். பொதும்பர்-மரச்செறிவு; மரப்பொந்து. குதம்பை-காதணி. 141.140-145. பரன்-கடவுள். கரத்தல்-மறைத்தல். மூய்-மூடிக் கொண்டு. தெற்றி-திண்ணை.
|
|
|
|