| 13. நெடுங்கழிநெடில் |
|
| |
தான்பெறு மழலை மொழிமகன் றன்னைத் தன்கையா லுளங்களித் தரிந்து சமைத்துல கறிய விடுபெருந் தொண்டன் றனைச்சிறுத் தொண்டனென் றவன்சேய் ஊன்பெறு நீயே யிரைத்தனை யென்றா லுரிமையோர் சற்றுமி லாதேன் உன்றிருத் தொண்ட னென்றிருப் பதனுக் குன்னுதல் பெரும்பிழை யன்றோ தேன்பெறு நளின மலர்களா யிரத்தோர் செழுமலர் குறைபட விரைந்து செங்கணொன் றிடந்து குறையற நிரப்பித் திருமறைச் சிலம்படிக் கணியா யான்பெறு நிதியே யென்றுல களந்தோ னேத்திநின் றிறைஞ்சுறு மமுதே இட்டநன் குதவி யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே.
|
(8) |
| |
| |
நின்புகழ் பாடும் பாணனார் தமக்கு நிதிதரச் சேரலன் றனக்க நீமுன முடங்க லொன்றளித் ததுபோ னிகரிலா வசவநா யகன்றன் அன்பினி லொருநூ றாயிரங் கூறிட் டடுத்தகூற் றினிலொரு கூறிங் களிப்பதற் குனது திருமுக மருளா லடியனேற் களிக்குநா ளுளதோ பொன்புரை கடுக்கை மலர்ந்தசெம் பவளப் புரிசடைப் பேரருட் குன்றே புணர்முலைக் கயற்கட் பிறைநுதற் கனிவாய்ப் பொற்றொடி யிடத்துவா ழமுதே என்பும்வெண் டலையு மணிந்துநான் புனித னென்றுமென் றிருந்திடு பவனே இட்டநன் குதவி யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே.
|
(9) |
| |
|
| |
8., உன்னுதல்- எண்ணுதல். நளினமலர்-தாமரைப்பூ. இடந்து-தோண்டி. 9. சேரலன்-சேரமான் பெருமாள். பாணபத்திரருக்குப் பொன்னளிக்குமாறு சேரமான் பெருமாளுக்கு, “மதிமலிபுரிசை மாடக் கூடல்” என்று தொடங்கும் திருமுகமளித்த செய்தி இங்குக் குறிப்பிடப்படுகிறது. பொன்புரை-பொன்னைப் போன்ற. கடுக்கை-கொன்றைமலர்.
|
|
|
|