14. குறுங்கழிநெடில் |
|
|
[குறுங்கழிநெடில் இதில் அமைந்துள்ள பாடல்கள் பத்தும் நெடுங்கழிநெடிலினுங் குறுகியதாகலின் குறுங்கழிநெடில் என்று பெயர் பெற்றது. இப்பாடல்களும் திருக்கையில் எழுந்தருளிய இட்டலிங்கத்தின்மீது பாடப்பட்டனவேயாம்.] |
|
|
|
எழுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் |
|
|
பொன்செய்வா ணிகர்போ லெவ்வழி யானும் புண்ணிய மீட்டினு மறிஞர் கொன்செய்பா தகமே புரிந்தன னின்றாள் குறுகுவ தென்றென விரங்க முன்செய்தீ வினையோ கனவிலு மறமே மொழிகிலேன் களித்திருக் கின்றேன் என்செய்கோ மறலிக் கென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே.
|
(1) |
|
|
மென்னிழற் றருவை யாடைபவர் தம்மை விடாநிழல் விட்டிடு மாபோல் நின்னடிக் கமல மடைந்திடிற் றொடர்ந்து நீங்கலா வினையுநீங் குறுமே கன்னலிற் கனியிற் சுவைதரு மமுதே கண்மணி யேயருட் கடலே என்னுயிர்த் துணையே யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே.
|
(2) |
|
|
|
1. பொன் செய் வாணிகர்-பொருள்தேடும் வணிகர்கள். கொன் செய்-தீமையைச் செய்கின்ற. என் செய்தோ-யாது செய்வேனோ. மறலிக்கு-நமனுக்கு. 2. விடாநிழல்-ஒருவரை எப்பொழுதும் விடாத அவர்களுடைய நிழல். நீங்கலா-நீங்காத. கன்னல்-கரும்பு.
|
|
|
|