முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
16. கைத்தலமாலை
அன்னை யாகியின் னுயிர்க்குயி ராமரு ளாளன்
பொன்னு மாரமு மணியுமா ரமுதமும் போல்வான்
தன்னை நாடொறுங் கண்டுகண் களிப்பதாச் சார்தற்
கென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.
(6)
அன்ன மூர்பவன் முதலியோ ரபயமென் றடைய
முன்ன மாலமுண் டவர்துயர் களைந்தருண் முதல்வன்
மின்னு மாமழு வலமுடைய வீரன்வீற் றிருப்ப
என்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.
(7)
பன்னு மாமறை தமிழினாற் பாடுநம் பிக்குப்
பொன்னு மாடையு மணிகளு மூர்தியும் பொருளும்
இன்னு மீபவ னருளினான் மேவிவீற் றிருப்ப
என்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.
(8)
பின்னும் வார்திரைக் கடலின்வீழ்ந் தமிழ்கையிற் பிடிப்ப
முன்ன மோர்புணை யகப்படு முறைமைபோற் பிறப்பின்
இன்னல் கூர்பொழு தெம்பிரான் வந்துவீற் றிருப்ப
என்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.
(9)
தன்னை யோர்பொழு திறைஞ்சுவான் கருதியித் தரைமேல்
மன்னு மாலயம் யாண்டுள தெனவல மராமல்
டொன்ன வாமலர்ச் சடையுடைப் புனிதன்வீற் றிருப்ப
என்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.
(10)

6. அருளாளன்-அருளை ஆள்பவன். ஆர் அமுதம்-மிகுந்த சுவை பொருந்திய அமுதம். 7. அன்னம் ஊர்பவன்-நான்முகன். ஆலம்-நஞ்சு. மழு-மழுப்படை. 8. நம்பி-சுந்தரா. ஈபவன்-கொடுப்பவன். 9. ஓர் புணை-ஒரு தெப்பம். இன்னல்கூர்பொழுது-துன்பத்தையடையுஞ் சமயத்தில். 10. மன்னுமாலயம்-நிலைபெற்ற திருக்கோயில்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்