முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
17. சிவநாம மகிமை
தீய நாளொடு கோளின் செயிர்தபும்
நோய கன்றிடு நூறெனக் கூறிய
ஆயுள் பல்கு மறம்வளர்ந் தோங்குறுந்
தீய தீருஞ் சிவசிவ வென்மினே.
(6)
வருந்தி யாற்றி வளர்த்த கதிர்த்தலை
பொருந்து வான்பயிர் போற்றுநர் போலவே
விரிந்த வேணியில் வெண்மதி சூடிபின்
திரிந்து காப்பன் சிவசிவ வென்மினே.
(7)
முந்தை யோர்சொன் மொழிந்து சிவனென
நிந்தை தானச் சிவனை நிகழ்த்தினும்
வந்த தீவினை மாற்றுவ னாதலால்
சிந்தை யோடு சிவசிவ வென்மினே.
(8)
நீச ரேனும்வா னீசர் நிகழ்த்தில்வான்
ஈச ரேனுஞ் சிவசிவ வென்கிலார்
நீச ரேயென் றியம்புறு நின்றுப
தேச நூல்கள் சிவசிவ வென்மினே.
(9)
எண்ணி நெஞ்சிற் சிவசிவ வென்பவர்
வண்ண மென்பதங் கிட்டி வணங்கவும்
உண்ண டுங்குவ னொண்டிறற் கூற்றுவன்
திண்ண மீது சிவசிவ வென்மினே.
(10)
இழிவுறுபுன் கருமநெறி யினனெனினுங்
      கொலைவேட னெனினும் பொல்லாப்
பழிமருவு பதகனெனி னும்பதிக
      னெனினுமிகப் பகரா நின்ற
மொழிகளுண்முற் றவசனாய்ச் சிவசிவவென்
      றொருமுறைதான் மொழியி லன்னோன்
செழியநறு மலரடியின் றுகளன்றோ
      வெங்கள்குல தெய்வ மென்ப.
(11)

6. தீயநாள்-தீய கோள்கள் பொருந்தியநாள். செயிர்தபும்-குற்றம் நீங்கும். பல்கும்-மிகுதிப்படும். 7. பின்திரிந்து-சிவ சிவ என்பவர்கட்குப்பின்னேதிரிந்து. 8. முந்தை-முன்பு. முன்பு சிவ சிவ என்று ஒருமுறை கூறியவர் பிறகு அப்பெருமானை இகழ்ந்தாலும் தீவிணையை மாற்றியருளுவர் என்றபடி. 9. நீசர்-இழிந்தவர். வானீசர்-தேவர்கள். இயம்புறும்-கூறும். 10. வண்ணமென்பதம்-அழகிய மெல்லிய கால்கள். கிட்டி-நெருங்கி. ஒண்டிறல் கூற்றுவன்-மிகுந்த ஆற்றலமைந்த நமன். 11. புன்கரும நெறியினன்-இழிந்த செய்கைகளை மேற்கொண்டிருப்பவன். பழிமருவு-பழிபொருந்திய. பதகன்-பாதகன். பதிதன்-இழிந்தவன். துகள்-தூள்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்