19. சிவஞானபாலையசுவாமிகள் நெஞ்சுவிடுதூது |
|
|
இலகுற்ற நன்னிமித்த மென்றும் - நிலவுற்ற ஆவி யணுவென்று மன்று நிறைவென்றும் மேவிய மாயைதான் மித்தையென்றும் - ஓவிலது நித்திய மென்றும் நிகழ்த்தி மயங்கும்போர் அத்தனையுந் தீர்த்த வருளானைப் பத்தரிடை உள்ள படிதோற்று முண்மை யுடையானைத் தெள்ளுஞ் சிவஞான தேசிகனை - விள்ளலறப் பற்றி யடியேன் படுமிப் பெருந்துயரம் முற்று மறிந்துசெல முன்னுநீ - எற்றுதிரை 255. வேலையுல கெல்லாம் வியக்குஞ் சிவஞானி மாலைமன மேவாங்கி வா.
|
|
|
|
|
251.250-255. பத்தர்-அன்பர். எற்று திரை-எடுத்தெறியும் அலை.
|
|
|
|
|