முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
19. சிவஞானபாலையசுவாமிகள் நெஞ்சுவிடுதூது
           மீளாத வீடுதவும் வித்தகனே - வேளாணை
           தள்ளு மடியார் தமக்குத் துணையாகக்
           கொள்ளு மிருமலர்த்தாட் குஞ்சரமே - விள்ளலறப்
           பத்திக் கடலுட் படிந்த வடியார்க்குத்
           தித்திக்குங் கோதிலாத் தேற ல் - முத்திக்குச்
           சாதியா லன்றுரிமை சாதனத்தா லென்றுண்மை
           போதியா நல்குமொரு பொன்மலையே நீதியால்
           வீடும் பொருளும் வெறுத்துமுத்தி வேண்டுவார்
           தேடுஞ் சிவஞான தேசிகனே - பாடும்
235.       பொருளே யெனவணங்கிப் போற்றிநின்று நின்பே
           ரருளே துணைவே றறியேன் - தெருளே
           நினது திருப்பவனி நேர்ந்தநாள் தொட்டுக்
           கனலின் மெழுகாய்க் கரையும் - புனல்பெருகு
           கண்ணொடு நின்றேங்குங் கங்குல் பகலின்றி
           உண்ண வுடுக்க வுவப்பொழியும் - பண்ணொடு
           பாடு நினைமெய் பதைக்க நினையெங்கும்
           தேடு முருகுந் திகைத்தலறும் - வாடுமெனைப்
           பாரானோ வென்னும் பரம சிவஞானி
           வாரானோ வென்னும் வழிபார்க்கும் -ஓரானோ
240.       என்னோ யெனப்புலம்பு மென்னைநின்பாற் றூதாக
           அன்னோ பலசெய் தஞரெய்துந் - தன்னோர்
           உடம்பும் பொறையா யொழிப்பக் கருதுங்
           குடும்பம் பகையாகக் கொள்ளும் - அடங்க
           ஒருபூ தருமில்லா துற்ற விடத்தே
           வருபூ ரணமா மருவி - ஒருபோதும்
           வேறிலா தொப்ப விரும்புறுமவ் வென்னுயிரை
           மாறிலா ஞான மணிவிளக்கே - ஈறிலாச்
           செல்வமே யெங்கள் சிவஞான தேவனே
           கல்விகொடு காணாத காட்சியே - புல்லுவாய்
245.       புல்லு மளவு முனைவிட்டுப் போவதுநான்
           இல்லை யிறைவனே யென்றநீ - தொல்லை
           விடய நினைந்தகன்று மீளாம னில்லா
           துடைய மலவிருளை யோட்டுஞ் - சுடரை
           மரமும் நிழலும் போன் மாழையும்பூ ணும்போல்
           இருமை யபேதமென்ப தென்றும் - பரமுயிர்கள்
           வேறென்றும் வேறல்ல வென்றும் விளம்புதலால்
           வீறொன்றும் தாதான் மியமென்றும் - மாறின்று
           சாமி யடிமையெனுஞ் சம்பந்த மென்றுமுளம்
           வேமிகலை யோர்மொழியில் வீப்பானைத் - தோமில்
           250.          உலகிற் கிறைவ னுபாதான மென்றும்

231.230-235. தேறல்-தேன். வீடும்-இல்லமும். 236.235-240. புனல் - நீர். கங்குல்-இரவு. உவப்பு-மகிழ்ச்சி. ஒரனோ-உணரானோ. 241.240-245. அஞர்-துன்பம். புல்லுவாய்-தழுவுவாய். 246.245-250. வீறு-பெருமை. வேம்-வேகும். வீப்பான்-அழிப்பவன். தோமில்-குற்றமற்ற.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்