முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
24. திருவெங்கை மான்மியம்
கொண்டு அத்தலத்தைச்சுட்டித் தாமருளிச்செய்த திருவெங்கைக் கோவை, திருவெங்கைக்கலம்பகம், திருவெங்கையுலா, திருவெங்கையலங்காரம் என்னும் நான்கு பிரபந்தங்களுள்ளே, உலாவில், (1) வது கண்ணிமுதல் (7) வது கண்ணி வரையும் அண்ணாமலை ரெட்டியார் பெருமையையும் திருப்பணியினருமையையும் பாராட்டியருளினமையேயன்றிக் கோவையினும் “வல்லகோலுக்கு வல்ல அண்ணாமலையார் கட்டுகோயில்” எனவுங், “கருப்ப இல்லிற்கிணையில்லையென்னும் திருவெங்கை” எனவும் சிறப்பித்து, அப்பிரபந்தங்களைச் சந்நிதியிலரங்கேற்றிச், சின்னாள் வசித்துச், சிதம்பரத்தை யடைந்தருளினார்.
அண்ணாமலைரெட்டியாரும் பிரிவாற்றாமையால் உடன் சென்று சிற்சபாநாயகரையும் சிவகாமியம்மையாரையுந் தரிசித்து, அங்கே சுவாமிகள் எழுந்தருளியிருத்தற்கு ஒரு திருமடங்கட்டுவித்து, சில நாள் வாசஞ்செய்து, அநுமதி பெற்றுச்சென்று, துறைமங்கலத்தி லிருந்துகொண்டு, சிவப்பிரகாசசுவாமிகள் சிவதரிசனத்தின்பொருட்டு எத்தலத்திற் கெழுந்தருளினும் தாமும் அத்தலங்கடோறுஞ் சென்று, தரிசித்து மீளுவர். அன்றியும், அன்பு மேலீட்டால் தாம் அங்கே ஒரு தூணிலமைத்து வைத்த சிவப்பிரகாசசுவாமிகள் திருவுருவத்திற்கு நித்திய பூசையும், பழமலைநாதருக்கு நித்தியநைமித்திகங்களும் அதிசிறப்பாக நடத்துவித்து, காலந்தோறும் சிவதரிசனஞ் செய்து கொண்டு, திருவருட்பேறறிற்குப் பாத்திரராய்ச் சிலகாலம் வாழ்ந்திருந்து, சிவலிங்க ஐக்கியமானார்.
(4)

4. தமிழ் குடியிருந்த தடவரை-பொதிய மலை. 192. இமிழ்திரை-ஒலிக்கின்ற அலை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்