முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
24. திருவெங்கை மான்மியம்
யாவருங் கொண்டாட அதிவிசித்திரமாக அமைத்துமுடித்தனன். கண்டவர் கண்களிகூரப் பெற்றார்கள்.
அதுகண்ட அண்ணாமலைரெட்டியாரும் அகங்களிகூர்ந்து, அர்த்தமண்டப முதலிய திருப்பணிகளை ஒருவாறுமுடித்து, *சாலிவாகன சகாப்தம் - கருசருu ஆகிய ருத்திரோற்காரிu வைகாசிமாதத்தில் பூர்வபக்ஷ துவாதசியும் அஸ்தநக்ஷத்திரமுங் கூடிய குருவார சுபதினத்திலே, ஆபதோத்தாரணசிவாசாரியார் குமாரர் பிழைபொறுத்தசிவாசாரியரால் விநாயகர் முதலிய சகல மூர்த்தங்களுடன் பழமலைநாதரையும் பெரியநாயகியம்மையாரையும் பிரதிஷ்டை செய்வித்து, கும்பாபிஷேகமும் நடத்து வித்து, பின்னும் வேண்டிய பெரும்பொருள் செலவிட்டு மஹா மண்டபம் நிருத்த மண்டபம் இரண்டு பிரகாரம் கோபுரம் திருமதில் திருக்குள முதலிய திருப்பணிகளைக் குறைவற இயற்றிக்கொண்டிருந்தனர்.
அந்நாளிலே, சிவப்பிரகாசசுவாமிகள் தக்ஷிணயாத்திரையை விரும்பிச் சகோதரர்களோடு காஞ்சியினின்றும் புறப்பட்டு, திருவண்ணாமலை முதலிய திவ்ய தலங்களைத் தரிசித்துக்கொண்டு வரும்போது, துறைமங்கலத்தை யடைந்து, ஒரு நந்தனவனத்திலே சிவபூசை செய்துகொண்டிருந்தார். ரெட்டியார் சுவாமிகளுடைய அற்புத மகிமைகளைக் கேள்வியுற்று அங்கடைந்து, தரிசித்தமாத்திரத்திலே அவர்களிடத்தே அநுக்கிரகம்பெற விரும்பி அடிமைபூண்டு, “சுவாமி! தேவரீர் இவ்விடத்தில் வாசஞ்செய்தருள வேண்டும்” என்று பிரார்த்தித்து, உடன்படுத்தி, தங்கள் குருவாகிய சென்னவசவையர் மடத்திற்கு மேற்றிசையில் ஒரு திருமடங் கட்டுவித்து, அதில் சுவாமிகளை எழுந்தருளச்செய்து, அகோராத்திம் பிரிவின்றி அணுக்கத் தொண்டராயமர்ந்திருக்க, சுவாமிகள் அவருக்குச் சன்மார்க்ங்களைப் போதித்துக்கொண்டு, இரண்டுவருஷம் வரையில் அங்கேயே வீற்றிருந்து, பின்பு தக்ஷிணதேசஞ் சென்று யாத்திரையை முடித்துக்கொண்டு, மீட்டுந் துறைமங்கலத்தை யடைந்து, அண்ணாமலை ரெட்டியாரால் திருவெங்கையிலே தம் பொருட்டுக் கட்டுவிக்கப்பட்ட திருமடத்திலே வீற்றிருந்து
* இது மேற்படி அண்ணாமலைரெட்டியார் சந்ததியாராய்த் தற்காலத்திலுள்ள சிவநேசமிக்க விருத்தாசலரெட்டியார் முன்னிலையில் அத்தலத்திலுள்ள சிலாசாசனத்திலிருந்து எடுத்தெழுதப்பட்டது. ஆனால், அண்ணாமலைரெட்டியாரே திருப்பணி முடித்துக் கும்பாபிஷேகம் நடத்துவித்திருக்கவும் அவர்பிதா நடத்துவித்ததாக அச்சாசனத்திலிருப்பது அவர்முதலிலே திருப்பணி தொடங்கியமை நோக்கிக் குறித்திருக்கலாம்.
(3)

3. தமிழ் குடியிருந்த தடவரை-பொதிய மலை. 192. இமிழ்திரை-ஒலிக்கின்ற அலை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்