1. சோணசைலமாலை |
|
|
சீரணி புகழுங் கல்வியுஞ் சிறந்த செல்வமு மில்லில்வாழ் பவர்க்குப் பேரணி கலமென் புதல்வருங் கதியும் பெறத்துதிப் பவர்க்கருள் பவனீ நேரணி கதியை மறந்தவர் கண்டு நினைந்துற மிக்கபே ரருளால் தாரணி முழுதுந் தோன்றிடுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(100) |
|
|
|
100. என்புதல்வர்-வேற்றுமைத் தொகை. கதியை மறந்தவர் தன்னைக் கண்ட மாத்திரத்தே அச்சிந்தனையுடையராய் நினைந்து அக்கதிபெறத் தோன்றிடும் என்க. நினைந்தென்பது-நினைக்கமுத்தி தருதலைக்குறித்து நின்றது. பேர் அணிகலம்-சிறந்த ஆபரணம்.
|
|
|
|
|