முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
3. திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி
காயங் கலைய நலியந் தகனணை காலஞ்செய்ய
காயங் கலையத ளானில நீரழல் காற்றெழிலா
காயங் கலைய னலரிசித் தாயினன் காதலழ
காயங் கலையதி ருஞ்செந்தி லாயென்க கன்றனெஞ்சே.
(30)

30. காயம் கலைய-உடல்நீங்க. நலி-வருந்துகின்ற, செய்ய காயம்-சிவந்த தழும்பு. கலைஅதளான்-கலைமானினது தோலையுடையவன். கன்றல்-வருந்தாதொழி. அலை அதிரும்-அலைகள் ஒலிக்கும்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்