| 4. பழமலையந்தாதி |
|
| |
மேருக் குவடு நிகர்தோட் பழமலை மேவுதிருத் தேருக் குவடு வசமாடு மாடத் தெருவினிற்போய் நீருக் குவடு விழியெழின் மாய்ந்தெதிர் நின்றுநம தூருக் குவடு விளைத்தன வேயின் றொழிவறவே.
|
(6) |
| |
| |
ஒழியாக் கவலை யொழிவதென் றோசொல் லுழல்புலத்தின் வழியாக் கவலை யிடைப்படு மானின் மயங்கிநின்று பழியாக் கவலை மனமே பணிந்து பரவிலைவேல் விழியாக் கவலை மகளிறை தாழ்பழ வெற்பினையே.
|
(7) |
| |
| |
வெற்றிக்கு மாரனை யீன்ற பழமலை வேந்தனின்னும் முற்றிக்கு மாரனை நோக்குங்கொ லோவென்பர் மூலைவம்புச் சொற்றிக்கு மாரநை வார்மட வாரவன் றோண்முலையோ டொற்றிக்கு மாரனை யோன்முனஞ் சேர வுழலுவரே.
|
(8) |
| |
| |
உழவரைச் சந்த விளவாளை பாய்வய லோங்குகுன்றைக் கிழவரைச் சந்த தமுநினை வாய்நற் கிளைவளரும் பழவரைச் சந்த நறுந்தழை வாங்கிப் பரவினடூள் எழவரைச் சந்த மயிலியல் பூசவு மெண்ணினளே.
|
(9) |
| |
| |
எண்ணிவ ருந்தின நொந்தோம் பழமலை யெய்திலர்ள னண்ணிவ ருந்தின மின்றே யினிக்கதிர் நற்புரவி மண்ணிவ ருந்தின மாவா லெழுந்துகள் வந்துடலின் கண்ணிவ ருந்தின வான்மதி றேய்க்குங் கடிநகரே.
|
(10) |
| |
|
| |
6. மேரு குவடு-மேருமலை. உவள்-இப்பெண். துவசம்-கொடிகள். வடு-மாவடு. நீர் உக்கு-நீரைச் சொரிந்து. எழில்மாய்ந்து-அழகழிந்து. வடுவிளைத்தாள்-வசையை உண்டாக்கினாள். 7. உழல் புலத்தின் வழி-சுழன்று திரியும் ஐம்புலவழியே. யாக்க-கட்ட. பழி ஆக்க வல்லை-பழியை உண்டாக்கவல்லாய். பரவிலை-போற்றினாயில்லை. 8. முற்று இக்குமாரன்-முதிர்ந்த கரும்புவில்லையுடைய காமன். மூலை வம்புச் சொல்-மறைவாகப் பேசும் பழிச்சொல். திக்கும் ஆரநைவார்-எல்லாத் திக்குகளினும் பரவ அதனால் வாடுவர். ஒற்றிக் குமார்-பொருந்தும்படி. அனையோன்-அப்பழமலைநாதர். 9. குன்றை கிழவர்-பழமலை நாதர். கிளை வளரும்-மூங்கில்கள் வளருகின்ற. சந்ததமும்-எப்பொழுதும். பழவரை-பழமலை. சந்த நறுந்தழை-சந்தன இலை. 10. மண் இவர் உந்தின மாவால் எழும் துகள்-நிலத்திலே தலைவராற் செலுத்தப்பட்டுவரும் குதிரைக் குளம்பால் எழுகின்ற தூளிகள். கான்நண்ணி-காட்டு வழியே பொருந்தி.
|
|
|
|