முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
5. பழமலை நாதர் பிச்சாடண நவமணி மாலை
முழங்குந் துடியொடு பிச்சையென் றேமுது குன்றர்வரச்
சழங்கு முலைமுதி யாளென் பலியெனத் தம்மனையில்
வழங்கு மனமென் றனர்புறம் போந்து வளர்முலையாள்
விழுங்கு மனம்பகற் போதுகொள் வாயென்று வேண்டினளே.
(9)

9. சழங்கல்-சரிதல். பகற் போது விழுங்கும் அன்னங்கொள்வாய் என்று வேண்டினள். எனவே இராப்போது மனையில் மனம் வழங்குவன் என்றாள் என்பது குறிப்பெச்சம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்