பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


103


மருமல ரெடுத்துனிரு தாளையர்ச் கிக்கவெனை
    வாவென் றழைப்பதெந்நாள்
  மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
    மரபில்வரு மௌனகுருவே.
     (பொ - ள்) "சருகுசல . . . சூழக்" - (தவநெறி நிற்பார்) உலர்ந்த சருகுகளையும் அதனினும் மென்மையான புனலையும் 1 (பசி வந்துற்ற போது) உணவாக உண்டு வாழ்வோர் ஒரு கோடியவரும், நிலாமுகிழ்ப் பறவைபோல் (அகத்தவமாகிய யோகமுறையால் உயிர் மூச்சினை மூலக் கனலை மூட்டி எழுப்பிப் புருவ நடுவாகிய திங்கள் மண்டிலத்து) தன்பாலுள்ள திங்கள் மண்டிலத்தினின்று ஒழுகும் வெள்ளிய அமிழ்த நிலவொழுக்கினையுண்டு அழியாத தன்மையராய் வாழ்வோர் அளவில்லாத கோடியராவர்; அவர்களும் (இறைவனை இடையறாதெண்ணும் எண்ணத்தால்) இரவுபகலென்றறியாது, (ஆண்டான் அடிமைத்திறத்தால்) இருவினைகள் இயற்றாமல் ஒப்பில்லாத தனிநிலைமிக்க மூதறிவின் வரம்பாகிய பேச்சற்ற நிலையோடு பேரின்ப நிட்டை எய்தியவர் கோடிக் கணக்கானவரும், மணிமந்திர சித்திநிலையை எய்தியவர்கள் கோடிக் கணக்கானவரும் (நாற்புறங்களிலும் முறைமுறையாக) சூழ்ந்து நிற்க;

    "குருமணி . . . எந்நாள்" - (நனிமிகச் சிறந்த இனிய) மாணிக்க மணி குயிற்றிய அரியணைமீது கொலுவீற்றிருந்தருளும் நின் திருவடியினை முறையுறக் கும்பிட்டு எட்டுறுப்பும் நிலத்தே படும்படி அளவில்லாதமுறை பணிந்தெழுந்து அடியேனுடைய மனக்குறைகளையெல்லாம் தீர்த்தருளும் வண்ணம், நறுமணமிக்க மலர்களைக் கொண்டுவந்து (போற்றித் தமிழ்மறை புகன்று) நின் திருவடிகளை யருச்சிக்க அடியேனை வரவென்று (நின் திருவாய் மலர்ந்து) அழைத்தருள்வ தெந்நாளோ?

        "மந்த்ர . . . குருவே"

     (வி - ம்) பக்ஷணிகள் - உண்டு வாழ்வோர். சகோரம் - வானத்துறைந்து திங்களின் நிலவிலுண்டாகும் மிக்க குளிர்ச்சியுடைய அமிழ்தத்தினையுண்டு வாழ்வது, இது மிக உயர்ந்த பறவை என்பர். மணி - சிவமணி; உருத்திராக்கம். மந்த்ரம் - திருவைந்தெழுத்து. குருமணி - சிறந்த மாணிக்கம்.

    மலர் வழிபாட்டின் மாண்பு வருமாறு :

    "பூக்கைக்"2 கொண்டரன் பொன்னடி போற்றிலார் (பக்கம் 59)

    சேய்ப்பிடி முறையென்னும் மற்கட நியாயமாக அடியேன் நின்னைப் பற்றிக்கொள்ளும் ஆற்றலில்லேன். எனினும், தாய்க்கடி முறையென்னும் மார்ச்சால நியாயமாக அடிகள் அடியேன் நிலைகண்டு வலிய வந்து ஆண்டருளவேண்டும்.

.
 1. 
'இழிவறிந்துண்பான்கண்'. திருக்குறள், 946 
 2. 
'பரந்துபல் லாய்மலர். 8. திருச்சதகம் - 6.