பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


104


சருகு முதலிய வுணவினையுட்கொண்டு தவமியற்றுமுறை வருமாறு :

"நாடுகளிற் புக்குழன்றும் காடுகளிற் சரித்தும்
    நாகமுழை புக்கிருந்தும் தாகமுதல் தவிர்ந்தும்
 நீடுபல காலங்கள் நித்தரா யிருந்தும்
    நின்மலஞா னத்தையில்லார் நிகழ்ந்திடுவர் பிறப்பில்
 ஏடுதரு மலர்க்குழலார் முலைத்தலைக்கே யிடைக்கே
    எறிவிழியின் படுகடைக்கே கிடந்துமிறை ஞானம்
 கூடுமவர் கூடரிய வீடுங் கூடிக்
    குஞ்சித்த சேவடியுங் கும்பிட்டே யிருப்பர்"
- சிவஞானசித்தியார், 10. 2 - 3.
"புற்று மாய்மர மாய்ப்புனல் காலே
    உண்டியாய் அண்ட வாணரும் பிறரும்
 வற்றி யாருநின் மலரடி காணா
    மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப்
 பற்றினாய் பதையேன் மனமிக வுருகேன்
    பரிகி லேன்பரி யாவுடல் தன்னைச்
 செற்றி லேன்இன்னுந் திரிதரு கின்றேன்
    திருப்பெருந்துறை மேவிய சிவனே."
- 8. செத்திலாப்பத்து 2.
(8)
ஆங்கார மானகுல வேடவெம் பேய்பாழ்த்த
    ஆணவத் தினும்வலிதுகாண்
  அறிவினை மயக்கிடும் நடுவறிய வொட்டாது
    யாதொன்று தொடினும்அதுவாய்த்
தாங்காது மொழிபேசும் அரிகரப் பிரமாதி
    தம்மொடு சமானமென்னுந்
  தடையற்ற தேரிலஞ் சுருவாணி போலவே
    தன்னிலசை யாதுநிற்கும்
ஈங்காரெ னக்குநிகர் என்னப்ர தாபித்
    திராவணா காரமாகி
  இதயவெளி யெங்கணுந் தன்னரசு நாடுசெய்
    திருக்கும்இத னொடெந்நேரமும்
வாங்காநி லாஅடிமை போராட முடியுமோ
    மௌனோப தேசகுருவே
  மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
    மரபில்வரு மௌனகுருவே.