பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


109


"சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்து ணின்று
 பொற்புட னடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி"
- 12. தில்லைவாழந்தணர் - 2.
"இன்பனாய்த் துன்பங் களைகின்றானே"
(6. 38 - 6)
"கற்றிருந்த கலைஞானம் ஆனாய் நீயே"
(6. 38 - 6)
"மன்னிய மங்கை மணாளா போற்றி"
(6. 57 - 5)
"மேலோர்க்கு மேலோர்க்கு மேலாய் போற்றி"
(6. 32 - 8)
    எல்லாம் வல்ல இறைவன் சிறப்புக் குணங்கள் ஆறு என்ப. அவை வருமாறு : 1. பெண்மை, 2. ஆண்மை, 3. வண்மை, 4. எண்மை, 5. உண்மை, 6. திண்மை, (ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம்). இவை பகம் என்னும் பெயரால் வழங்கப்படும். இவ்வுண்மை வருமாறு :

"ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனை
    இப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே
 கூவியம ருலகனைத்து மூருவிப் போகக்
    குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலும்
 தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை
    சரசுவதிபொற் றாமரைபுட் கரணி தெண்ணீர்க்
 கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த
    குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்தனாரே."
- 6. 75 - 10.
    சிவனாரின் உண்மைத் தன்மை வருமாறு :

"சிவனரு உருவு மல்லன் சித்தினோ டசித்து மல்லன்
 பவமுதல் தொழில்கள் ஒன்றும் பண்ணிடு வானு மல்லன்
 தவமுத லியோக போகந் தரிப்பவன் அல்லன் தானே
 இவைபெற இயைந்தும் ஒன்றும் இயைந்திடா இயல்பி னானே."
- சிவஞானசித்தியார், 1. 3 - 11.
(1)
மண்ணாதி ஐந்தொடு புறத்திலுள கருவியும்
    வாக்காதி சுரோத்ராதியும்
  வளர்கின்ற சப்தாதி மனமாதி கலையாதி
    மன்னுசுத் தாதியுடனே
  தொண்ணூற்றொ டாறுமற் றுள்ளனவும் மௌனியாய்ச்
    சொன்னவொரு சொற்கொண்டதே
  தூவெளிய தாயகண் டானந்த சுகவாரி
    தோற்றுமதை என்சொல்லுவேன்