பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


117


    மேதினிக்கண் மெய்க்குரவராய்த் தோன்றியருள்பவர், எவ்வடிவினரெனினும் எத்தேவரெனினும் அவரனைவரும் சிவபெருமானாரால் செலுத்தப்படும் மெய்க்கருவியரே யாவர். இவ்வுண்மை வருமாறுணர்க:

"ஆரண ஆக மங்கள் அருளினால் உருவு கொண்டு
 காரணன் அருளா னாகில் கதிப்பவர் இல்லை யாகும்
 நாரணன் முதலா யுள்ள சுரர்நரர் நாகர்க் கெல்லாம்
 சீரணி குருசந் தானச் செய்தியுஞ் சென்றி டாவே."
- சிவஞானசித்தியார், 1. 2 - 18.
(5)
பண்ணே னுனக்கான பூசையொரு வடிவிலே
    பாவித் திறைஞ்சஆங்கே
  பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்திஅப்
    பனிமல ரெடுக்கமனமும்
நண்ணேன் அலாமலிரு கைதான் குவிக்கஎனில்
    நாணும்என் னுளம்நிற்றிநீ
  நான்கும்பி டும்டோ தரைக்கும்பி டாதலால்
    நான்பூசை செய்யல்முறையோ
விண்ணேவி ணாதியாம் பூதமே நாதமே
    வேதமே வேதாந்தமே
  மேதக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள்
    வித்தேஅ வித்தின் முளையே
கண்ணே கருத்தேஎன் எண்ணே எழுத்தே
    கதிக்கான மோனவடிவே
  கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
    கருணா கரக்கடவுளே.
     (பொ - ள்) "பண்ணே . . . நிற்றி நீ" - (வாலறிவே வாய்மைவடிவாகத் தோன்றும் வள்ளலே) உனக்கு (நிறைந்த விழைவினையூட்டும் செந்தமிழ் மந்திரமாம் போற்றித் தொடர் ஓதிப் பூத்தூவி வழிபடுதலாகிய) இன்ப வழி பாட்டை ஒரு வடிவிலே வைத்துச் செய்வேனல்லன்; படர்தலாகிய பாவனை புரிந்து தலைவணக்கம் செய்யேன்; (பூசைக்குச் சிறந்த பொருள்களுள் ஒன்று நறுமலர்) பார்க்கப்படுகின்ற மணமிக்க மலரினுள்ளும் நீயே நீக்கமின்றி விரவி நிற்கின்றாய்; (அதனால்) அக் குளிர்ந்த மலரை (ஆங்குநின்றும் பிரித்து) நின் பூசைக்கென்று வேறிடத்துக்குக் கொண்டுவர எளியேன் மனம் ஒப்பவில்லை. அதுவுமன்றி நீ என் உள்ளத்துள்ளும் வீற்றிருந்தருள்கின்றாய். அதனாலும் மனம் நாணுகின்றது.