(பொ - ள்) "நான்கும்பி . . . . . . முறையோ" - அடியேன் உச்சியின்மேல் இரு கையும் குவித்துக் கும்பிட்டு வழிபடலாமென வுன்னின் (நீ என்னுள் வீற்றிருந்தருளி எளியேன் வினைக்கீடாகச் செய்வித்தருள்கின்றாய்; அவ்வழி அடியேன் செய்கின்றேன்) நீயும் அடியேனும் சேர்ந்து கும்பிடுவதால் அக்கும்பிடுதல் அரைக்கும்பிடு ஆகும். அங்ஙனம் எளியேன் அரைகுரையாகப் பூசை செய்வது நன்முறை யாகுமோ?
"விண்ணே . . . . . . மோனவடிவே" - பெருவெளியே! விண்முதலாகப் பூதமீறாகச் சொல்லப்படும் மெய்யாகிய தத்துவங்களே, ஒலிமெய்யே, ஒலியின் தோற்றத்தாலுறும் மறையே, மறைமுடிவே. மேன்மை பொருந்திய செவிச்செல்வமே, கேள்விச் செல்வமென்னும் இருநிலத்துள் முளைக்கும் வித்தே. அவ் வித்தினின்றுந் தோன்றும் முளையே, (கண்ணிற் கருமணியொப்பான் கடவுளாதலின்) கண்ணே, கண்ணால் விளையப்படு கருத்தே, என்னை வழிப்படுத்தும் எண்ணாகிய அளவையே எழுத்தாகிய இலக்கணமே, திருவடிப்பேற்றினுக்குச் சிறந்த உரிமையான உரையாடா ஒப்பில் ஒரு திருவே!
"கருதரிய . . . கடவுளே"-
(வி - ம்) பூசை - (பூசுதலென்னும் அடியாகத் தோன்றி அழகுபடுத்துதலாகிய) வழிபாடு. இருத்தி - இருக்கின்றாய். பனி - குளிர்ச்சி.
மெய்ப்பூசை யென்பது தன்னை மறந்து பூசையே தானாய் நின்று திருவருளாலியற்றுவது. இவ்வுண்மை வருமாறு:
| "கண்ட போதே விரைந்திழிந்து கடிது சென்று கைத்தண்டு |
| கொண்டு மகனார் திருமுதுகிற் புடைத்துக் கொடிதா மொழிகூறத் |
| தொண்டு புரியுஞ் சிறியபெருந் தோன்ற லார்தம் பெருமான்மேன் |
| மண்டு காத லருச்சனையின் வைத்தார் மற்றொன் றறிந்திலார்." |
| - 12. சண்டேசுரர், 46. |
| "பூக்கைக் கொண்டரன்" (பக்கம் 59) |
| "நெக்கு நெக்கு"(பக்கம் 42) |
இறைவன் எங்கு நிறைந்த பொருளாயினும் ஆவின்பால் மடுவின் வழியாக வருவதுபோன்று அன்பு விளைதற்குரிய திருவிடங்களிலே வழிபடுதல் ஏற்புடைத்தாம். அவ்வுண்மை வருமாறு:
| "தன்னுணர வேண்டித் தன துருவைத் தான்கொடுத்துத் |
| தன்னுணரத் தன்னுள் இருத்தலால் - தன்னுணரும் |
| நேசத்தர் தம்பால் நிகழுந் ததிநெய்போற் |
| பாசத்தார்க் கின்றாம் பதி." |
| - சிவஞானபோதம், 12. - 3 - 1. |
| "சொல்லினுஞ் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும் |
| அல்லிலு மாசற்ற வாகாயந் தன்னிலு மாய்ந்துவிட்டோர் |