காடடர்ந்த மலைகளினிடையே மனமகிழ்ந் துறைதலாலும் (தவயோகங்களான் மிக்கவர் உம்மைத் தவராச சிங்கம் எனக் கொண்டாடுவார்கள்.)
"வேதாந்த . . . சித்தர்கணமே"
(வி - ம்) பொற்பு - அழகு. வள் - கூர்மை. உகிர் - நகம். இடை - இடுப்பு. கனகந்தி - பெரிய யானை. நூறல் - அழித்தல். பிரகாசம்-புகழ்.
இச் செய்யுளில் தவத்தோர்க்கும் அரிமாவுக்கும் ஒப்புக்கூறும் திறம் உற்றுணர்க. செந்நெறிக்கு உயிராகத் திருவைந்தெழுத்தும், உடலாகத் திருவெண்ணீறும், உடையாகச் சிவமணியும் திகழ்கின்றன. திருவைந்தெழுத்திற்கும் திருவெண்ணீற்றீனுக்கு மட்டுமே தனித்தனித் திருப்பதிகங்கள் காணப்படுகின்றன. சிவனெறித் திருவெண்ணீறே திருமாலுக்கும், திருமாலை வழிபடுவோர்க்கும் இருந்து வந்ததென்னும் மெய்ம்மையினை நம்மாழ்வார் கூறுமாறு காண்க :
| "கரியமேனி மிசை வெளியநீறு சிறிதே யிடும் |
| பெரியகோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் றன்னை |
| உரியசொல்லா லிசைமாலைக ளேத்தி யுள்ளப்பெற்றேற |
| கரியதுண்டோ வெனக் கின்றுதொட்டு மினியென்றுமே". |
| - திருவாய்மொழி, 4. 5. 6. |
| "ஏறிய பித்தினோ டெல்லா வுலகு கண்ணன் படைப்பென்னும் |
| நீறு செவ்வே யிடக்காணில் நெடுமா லடியா ரென்றோடும் |
| நாறு துழாய் மலர்காணில் நாரணன் கண்ணி யீதென்னும் |
| தேறியும் தேறாது மாயோன் திறத்தனளே யித்திருவே." |
| - திருவாய்மொழி, 4, 4 - 7. |
| "ஐயுந் தொடர்ந்து விழியுஞ் செருகி அறிவழிந்து |
| மெய்யும் பொய்யாகி விடுகின்ற பேசதொன்று வேண்டுவல்யான் |
| செய்யுந் திருவொற்றி யூருடை யீர்திரு நீறுமிட்டுக் |
| கையுந் தொழப்பண்ணி ஐந்தெழுத் 1 தோதவுங் கற்பியுமே." |
| - பட்டினத்துப்பிள்ளையார். |
(9)
1. | 'படைக்கலமாகவுன்'. 4. 81 - 8. |