(வி - ம்) கர்மம் - வினை. மதி - அறிவு. கைவல்லியம் - வீடுபேறு. மருட்டுதல் - மயக்குதல். வித்தை - கல்வி.
வினையின் தன்மையினை வருமாறுணர்க :
| "தன்மமோ டதன்ம மாகித் தானிரு பயனுந் தந்து |
| நன்மைதீ மையினும் இன்பத் துன்பினு நாடிக் காண |
| முன்னமே ஆன்மா வின்தன் மும்மலத் தொன்ற தாகிக் |
| கன்மும் மூலங் காட்டிக் காமிய மலமாய் நிற்கும்." |
| - சிவஞானசித்தியார், 2. 2 - 36 |
பிறரை மருட்டி வெருட்டி வெல்லுமாறு கற்கும் கல்வி மெய்ந்நூற் கல்வியாகாது. மெய்ந்நூற்கல்வியெனினும் பதிநூற் கல்வியெனினும் ஒன்றே. எனைய பசுநூற் கல்வியெனினும் உலகியற்கல்வி யெனினும் ஒன்றே. இவற்றைச் சிறப்புக்கல்வி யென்றும், பிறப்புக்கல்வி யென்றும் கூறுப. உலகியற்கல்வி வருமாறுணர்க :
| "எச்சனைத் தலையைக் கொண்டு செண்டடித் திடபம் ஏறி |
| அச்சங்கொண் டமரர் ஒட நின்ற அம் பலவற் கல்லாக் |
| கச்சரைக் கல்லாப் பொல்லாக் கயவரைப் பசு நூல் கற்கும் |
| பிச்சரைக் காணா கண்வாய் பேசாதப் பேய்க ளோடே.' |
| - 1. திருமாளிகைத்தேவர், 4. 1. |
ஆரியவேதம் - பசுநூல் எனப்படும். தமிழ்மறை - பதிநூல் எனப்படும். அவ்வுண்மை வருமாறு :
| "அருமறையைச் சிச்சிலிபண் டருந்தத் தேடும் |
| அதுபோலன் றிதுவென்று முளதா முண்மைப் |
| பரபதமும் தற்பரமும் பரனே யன்றிப் |
| பலரில்லை றென்றெழுதும் பனுவல் பாரின் |
| எரியினிடை வேவாதாற் றெதிரே யோடும் |
| என்புக்கு முயிர்கொடுக்கு மிடுநஞ் சாற்றுங் |
| கரிவையவளை விக்குங்கன் மிதக்கப் பண்ணும் |
| கராமதலை கரையிலுறக் காற்றுங் காணே." |
| - திருமுறைகண்டபுராணம், 17. |
| "இறையுண்மையில்லார் இறையுயிரே என்பார் |
| இறைகோலம் போற்றியை பில்லார்." |
| இறையுண்மை யில்லார்-புறப்புறச்சமயத்தார் |
| இறையுயிரே என்பார்-புறச்சமயத்தார் |
| இறைகோலமே என்பார்-அகப்புறச் சமயத்தார் |
| திருவடிப்பேற்றின் பொருத்த முணரார்-அகச்சமயத்தார். |
(10)