நித்தமும் அநித்தமும் அஞ்சனநி ரஞ்சனமும் | நிட்களமும் நிகழ்சகளமும் | நீதியும் அநீதியும் ஆதியோ டநாதியும் | நிர்விடய விடயவடிவும் | அத்தனையும் நீயலதெள் அத்தனையும் இல்லையெனில் | யாங்களுனை யன்றியுண்டோ | அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி | ஆனந்த மானபரமே. |
(பொ - ள்) "சுத்தமும் . . . நிலையும்" - வாலிது எனப்படும் சுத்தமும், வாலாமை எனப்படும் அசுத்தமும், துன்ப இன்ப வேறுபாடுகளும் தொடர்பும் தொடர்பின்மையும், பருமையும் நுண்மையும், பற்றும் பற்றின்மையும், சொல்லெனச் சிறப்பித்துச் சொல்லப்படும் மறையும், அம் மறை முடிபும், பிறப்பு நிலையாகிய கட்டும், சிறப்பு நிலையாகிய ஒட்டும், இடையறாது உள்ளலும் உள்ளாமையும், ஒற்றுமையும் வேற்றுமையும் ஆகிய நிலைகளும்;
"பெருமையொடு . . . சகளமும்" - பெருமை சிறுமைகளும், அருமை எளிமைகளும், பெண்மை ஆண்மைகளும், அழியாமை அழிவுகளும், குற்றமும் குற்றமின்மையும், வடிவமின்மையும் (பிறர்பொருட்டு) நேரக்கூடிய வடிவங்களும்;
"நீதியும் - உண்டோ" - அறமுறையும், அஃதின்மையும், தொடக்கமும், தொன்மையும், காணப்படாதவையும், காணப்படுபவையும், ஆகிய அத்தனையும் (நின் திருவாணை வழி இயங்குவதாலும் திருவருட் பெருவெளியினையே என்றும் நிலைக்களமாகக்கொண்டு நிற்பதாலும்) நின்னையன்றி எள்ளளவும் வேறு (தனியே பிரிந்து நிற்பது) இல்லையெனில் அடியேங்கள் உன்னையன்றித் தன்யே பிரிந்து வேறு நிற்பதுண்டோ? (இல்லையென்க.)
"அண்டபகி . . . மானபரமே"-
(வி - ம்) சுத்தம்-வாலிது; தூய்மை. அசுத்தம்-வாலாமை; தூய்மையின்மை. துக்கம் - துன்பம். சுகம்-இன்பம். தொந்தம்-தொடர்பு. நீர்த்தொந்தம் - தொடர்பின்மை. பெத்தம் - கட்டு. முத்தி - ஓட்டு. பாவம்-நினைத்தல்; உள்ளல் (தியானம்). அபாவம்-நினையாமை. நித்தம் - அழியாமை. அதித்தம் - அழிவுள்ளது. அஞ்சனம் - குற்றம். நிரஞ்சனம்-குற்றமின்மை. நிட்களம் - வடிவமின்மை. சகளம்-வடிவமுடைமை. ஆதி - தொடக்கம். அனாதி - தொடக்க மின்மை; தொன்மை. நிர்விடயம்-காணப்படாதவை. விடயம் - காணப்படுபவை.
எல்லாம் சிவனென்னும் உண்மையினை வருமாறு உணர்க :
| "குற்றநீ குணங்கள்நீ கூடலால வாயிலாய் |
| சுற்ற நீ பிரானு நீதொடர்ந்திலங்கு சோதிநீ |