மலச்சார்பும் ஒட்டின்கண் அருண் கலச்சார்பும் உள்ளன. இவ்வுண்மைகள் வருமாறுணர்க:
| "சார்புணர்ந்து சார்புகெட வொழுகின் மற்றழித்துச் |
| சார் தரா சார்தரு நோய்," |
| - திருக்குறள் 359. |
| "சார்புணர்ந்து சார்பு கெட வொழுகின் என்றமையால் |
| சார்புணர்தல் தானே தியான முமாம் - சார்பு |
| கெடவொழுகின் நல்ல சமாதியுமாம் கேதப் |
| படவருவ தில்லைவினைப் பற்று," |
| - திருக்களிற்றுப்படியார், 34. |
| "அறிந்திடும் ஆன்மா ஒன்றை ஒன்றினால் அறித லானும் |
| அறிந்தவை மறத்த லானும் அறிவிக்க அறித லானும்1 |
| அறிந்திடுந் தன்னை யுந்தான் அறியாமை யானுந் தானே |
| அறிந்திடும் அறிவன் அன்றாம் அறிவிக்க அறிவன் அன்றே." |
| - சிவஞானசித்தியார், 5. 2-2. |
சிவகுருவின் மெய்ம்மை வருமாறு :
| "சுத்த சிவன்குரு வாய்வந்து தூய்மைசெய் |
| தத்தனை நல்கருள் காணா அதிமூடர் |
| பொய்த்தகு கண்ணான் நமரென்பர் புண்ணியர் |
| அத்தன் இவனென் றடிபணி வாரே" |
| - 10. 1553. |
உடல் பொருள் ஆவிகளை உடையான்பால் ஒப்புவிக்கு முண்மை வருமாறு :
| "அன்றே யென்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமுங் |
| குன்றே அனையாய் என்னையாட் கொண்டபோதே கொண்டிலையோ |
| இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்டோண் முக்கண்எம்மானே |
| நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே." |
| - 8. குழைத்தபத்து - 7. |
இம் முறையான் மேவிச் செய்யும் ஆவியின் செயலெலாம் தாவில் முதல்வன் தன்செயலே யென்பது வருமாறு :