"கன்னிகை . . . அதுபோல் - மங்கைப்பருவம் எய்தாத கன்னிப் பெண்ணொருத்தி (மெய்ம்மையாகப் பலராலும் விழைந்து நுகர்ந்து வரும்) சிற்றின்பத்தினை (பருவமின்மையால்) கசக்கும் வேம்பென வெறுத்து மொழிவள்; (அவளே மங்கைப்பருவ மெய்தித் திருவருளால்) கணவனுடன் திருமணமுறையாற் கூடி இல்வாழ்வேற்று இன்புற்று வருங்கால், அவ்வின்பமே பேரின்பமென அவட்குத் தோன்றுதலால், முன்னம் என்னமொழிந்தோம் என்று நினைந்து அடங்காச் சிரிப்பெய்துவள்; அதுபோல்;
"சொன்னபடி . . . சுகவாரியே" - சொன்னபடி கேட்டு நடக்கும் அறிவில்லாத அடியேனுக்கு, நின்னுடைய பேரருட் பெருக்கு உளதாயின், நீங்காப்பேரின்பத் தோற்றம் ஓங்கும். முக்குணச்சார்பில்லாத நன்மைக்கு மேலான விழுமிய முழுமுதலே பேரொளிப்பிழம்பே பேரின்பப் பெருங்கடலே!
(வி - ம்) இன்-இனிய: ருசித்திட - சுவைகொள்ள. அனுபூதி - மெய்யுணர்வி; மெய்ப்பொருளை மெய்யுணர்விற் கொண்டமேலோன். கன்னி - மங்கைப்பருவம் எய்தா நங்கை. சுகம் - இன்பம். ஆரம்பம் - தொடக்கம். வாரி - கடல்.
கன்னிகையொப்பினை வருமாறுணர்க :
| "கருவிகழிந் தாற்காணார் ஒன்றும் எனிற் காணார் |
| காணாதார் கன்னிகைதான் காமரதங் காணாள் |
| மருவிஇரு வரும்புணர வந்த இன்பம் |
| வாயினாற் பேசரிது மணந்தவர் தாம் உணர்வர் |
| உருவின்உயிர் வடிவதுவும் உணர்ந்திலர்காண் சிவனே |
| உணராதார் உணர்வினால் உணர்வதுகற்ப னைகாண் |
| அருள்பெறின்அவ் விருவரையும் அறிவிறந் தங்கறிவர் |
| அறியாரேற் பிறப்பும்விடா தாணவமும் அறாதே." |
| - சிவஞானசித்தியார், 8. 3 - 1. |
செவ்விவாராமுன்னும் செவ்வி வந்த பின்னும் உள்ள நிலைமை, வருமாறு : "கன்னிகையொருத்தி சிற்றின்பம் வேம் பென்னினும் கைக்கொள்வள்1 பக்குவத்தில், கணவனருள் பெறின், முன்னே சொன்ன வாறென்னெனக்கருதி நனவாவள்
உண்மை யுணர்ந்துவப்பன். இது,
| "தற்பர மல்ல சதாசிவன் தானல்ல |
| நிட்கள மல்ல சகள நிலையனல்ல |
| அற்புதமாகி யநுபோகக் காமம்போற் |
| கற்பனை யின்றிக் கலந்துநின் றானே." |
| - 10. 2903. |
(1)
1. | 'முகத்துக்கண்' 10. 2904. |