எந்நாளும் உடலிலே உயிராம் உனைப்போல் | இருக்கவிலை யோமனதெனும் | யானுமென் நட்பாம் பிராணனும் எமைச்சடம | தென்றுனைச் சித்தென்றுமே | அந்நாளி லெவனோ பிரித்தான் அதைக்கேட்ட | அன்றுமுதல் இன்றுவரையும் | அநியாய மாயெமை யடக்கிக் குறுக்கே | அடர்ந்தரசு பண்ணிஎங்கள் | முன்னாக நீஎன்ன கோட்டைகொண் டாயென்று | மூடமன மிகவும்ஏச | மூண்டெரியும் அனலிட்ட மெழுகா யுளங்கருகல் | முறைமையோ பதினாயிரஞ் | சொன்னாலும் நின்னரு ளிரங்கவிலை யேஇனிச் | சுகம்வருவ தெப்படிசொலாய் | சுத்தநிர்க் குணமான பரதெய்வ மேபரஞ் | சோதியே சுகவாரியே. |