பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

189
அதனாலேயே நினைத்தபோதெல்லாம் பாடம் சொல்ல வல்லனாகின்றான். அதனால் அவன் வேறு, பாடம் வேறு என்று சொல்லுவதற்கில்லை. ஆயினும் இரண்டற்ற ஒனறாம் புணர்ப்பன்றி ஒன்றழிந்தொன்று நிற்பதுமன்று. இரண்டும் வேறுவேறாக நிற்பதுமன்று. புணர்ப்பதாக நிற்பதெனப் புலன் கொள்க. வருமாறுணர்க:

பாடமனங் கொண்டோனப் பாடமாய் நிற்பதுபோல்
நாடரிய பாவனையும் நாடு.
    பாவகப் பேற்றினை வருமாறுணர்க :

"கண்டஇவை அல்லேன்நான் என்றகன்று காணாக்
    கழிபரமும் நானல்லேன் எனக்கருதிக் கசிந்த
 தொண்டினொடும் உளத்தவன்தான் நின்றகலப் பாலே
    சோகமெனப் பாவிக்கத் தோன்றுவன்வே றின்றி
 விண்டகலும் மலங்களெல்லாம் கருடதியா னத்தால்
    விடமொழியும் அதுபோல விமலதையும் அடையும்
 பண்டைமறை களும்அதுநான் ஆனேன் என்று
    பாவிக்கச் சொல்லுவதிப் பாவகத்தைக் காணே."
- சிவஞானசித்தியார். 9. 3 - 1.
ஒன்றினுள் ளாகியவ் வொன்றின்வழி நிற்பதாம்
நின்றவது நானானேன் நீடு.
     கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டையென்னும் நான்கும் முறையே சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நாற்படியின் நான்மைத் தொடர்பென்ப.

     ஆற்றில் மூழ்குவோன் அவ்வாற்று நீராலேயே மூழ்குவிக்கப்படுகின்றனன் என்னும் உண்மைபோல ஆவியும் திருவருளாலேயே பாவனை புரியும் என்பது வருமாறு :

"பாவிக்கின் மனாதி வேண்டும் பயனிலை கரணம் நீத்துப்
 பாவிப்பன் என்னில் என்ன பழுதுள பாவ கத்தால்
 பாவிக்க ஒண்ணா னென்று பாவிப்பன் 1என்னின் நீயென்
 பாவிக்க வேண்டா ஆண்ட பரனருள் பற்றி னோர்க்கே."
- சிவப்பிரகாசம், 86.
(3)
 
சொல்லான திற்சற்றும் வாராத பிள்ளையைத்
    தொட்டில்வைத் தாட்டிஆட்டித்
  தொடையினைக் கிள்ளல்போற் சங்கற்ப மொன்றில்
    தொடுக்குந் தொடுத்தழிக்கும்
 
 1. 
'பாவகமேற்' சிவஞானபோதம், 6. 2 - 2.