பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

190
பொல்லாத வாதனை எனும்சப்த பூமியிடை
    போந்துதலை சுற்றியாடும்
  புருஷனி லடங்காத பூவைபோல் தானே
    புறம்போந்து சஞ்சரிக்கும்
கல்லோ டிரும்புக்கு மிகவன்மை காட்டிடுங்
    காணாது கேட்ட எல்லாங்
  கண்டதாக் காட்டியே அணுவாச் சுருக்கிடுங்
    கபடநா டகசாலமோ
எல்லாமும் வலதிந்த மனமாயை ஏழையாம்
    என்னா லடக்கவசமோ
  இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
    எங்குநிறை கின்றபொருளே.
     (பொ - ள்) "சொல்லா . . . தொடுத்தழிக்கும்" - (விளையாட்டுவிருப் பால் தன் மனம்போல் நடக்கும் பிள்ளையை வழிப்படுத்தத் தாயானவள்) தன் சொல்வழி வாராத பிள்ளையை நோக்கி (வருதற்பொருட்டு அதன் வழி நிற்பாள்போல்) வரவழைத்துத் தொட்டிலில்வைத்துப் பண்ணொடு பாடி அசைத்து ஆட்டி (அப்பிள்ளை தூங்கிவிடாதபடி முயற்சியிற் புகுத்தவுன்னி) தொடையினைக் கிள்ளி எழுப்புவதுபோன்று நினைவு ஒன்றில் புகுத்தும். (புகுத்தியபடி விட்டுவிடாது உடனே மற்றொன்றில் செலுத்துவதாகிய) நீக்கத்தினைச் செய்வதாகிய அழிவினைச் செய்யும்;

     "பொல்லாத . . . . . . சஞ்சரிக்கும்" - துன்பம் நீங்காத நிலைஎன்னும் நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படக்கம், கட்புலனாம் புள்ளி (விந்து), செவிப்புலனாம் ஓசை (நாதம்) ஆகிய ஏழு நிலையங்களிலும் சென்று களிப்பு மேலீட்டால் தலைசுற்றியாடும்; கணவனில் அடங்காத கற்பிலா மனைவியைப்போன்று தான் நினைத்தபடி வெளியே சென்று சுற்றித் திரியும்.

     "கல்லோ . . . வசமோ" - கல்லைக்காட்டிலும், வல்லிரும்பைக்காட்டிலும் சொல்லுமிடத்துத் தனக்கே மிக்க வன்மையுண்டென்று காட்டிக் கொள்ளும். கண்ணாரக் காணாது, செவியாற் கேட்டவெல்லாம் கண்ணாரக்கண்டதுபோல் துகளளவாக நினைக்கச்செய்யும்; (இவ்வாறு) வஞ்சக நாடகம் நடிக்கும் மாய வித்தையும் புரியும்: இவ்வெல்லாவற்றிலும் வன்மை மிக்கது மனமாகிய மாயை; அதனை நின் திருவருளாலன்றி அடியேனால் அடக்கியாளும் வன்மை அறிவில்லாத அடியேனுக்கு உண்டோ? (இல்லை என்றபடி.)

         "இகபரமிரண் . . . பொருளே" -

     (வி - ம்.) சற்றும் - சிறிதும், தொட்டில் - ஏணை. ஆட்டுதல் - அசைத்தல். கிள்ளல் - நகங்கொண்டழுத்தல். சங்கற்பம் - நினைவு; நினைந்துகொள்ளும் உறுதி. வாதனை - பழக்கம். புருஷன் - கணவன்.