கண்ணார நீர்மல்கி யுள்ளநெக் குருகாத | கள்ளனே னானாலுமோ | கைகுவித் தாடியும் பாடியும் விடாமலே | கண்பனித் தாரைகாட்டி | அண்ணா பரஞ்சோதி யப்பா உனக்கடிமை | யானெனவு மேலெழுந்த | அன்பாகி நாடக நடித்ததோ குறைவில்லை | அகிலமுஞ் சிறிதறியுமேல் | தண்ணாரு நின்னதரு ளறியாத தல்லவே | சற்றேனும் இனிதிரங்கிச் | சாசுவத முத்திநிலை ஈதென் றுணர்த்தியே | சகசநிலை தந்துவேறொன் | றெண்ணாம லுள்ளபடி சுகமா யிருக்கவே | ஏழையேற் கருள்செய்கண்டாய் | இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி | எங்குநிறை கின்றபொருளே. |