பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

197
"நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
 பெருமை யுடைத்திவ் வுலகு."1
- திருக்குறள். 336.
"ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
 பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
 சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
 நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே."
- 10. 189.
     பயன்பெறுமாறு உடம்பினை நெடுநாளோம்புதல் வருமாறு :

"உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
 திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
 உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
 உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே."
- 10. 704.
     மெய்யுணர்வுக் கல்வியின் மேம்பாடு வருமாறு :

"வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்
 அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார்
 எல்லா இடத்தும் உளன்எங்கள் தம்மிறை
 கல்லா தவர்கள் கலப்பறி யாரே."
- 10. 298.
"கல்லா நெஞ்சின், நில்லான் ஈசன்
 சொல்லா தாரோ, டல்லோ நாமே."
- 3. 40-3.
     ஏற்பதிகழ்ச்சியென்னும் உண்மை வருமாறு:

"கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
 இரவாமை கோடி உறும்."
- திருக்குறள், 1061.
     வறுமை கொடிதென்பது வருமாறு காண்க :

"இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
 இன்மையே இன்னா தது."
- திருக்குறள், 1041.
     நுண்ணறிவின்மையும் வறுமை ஆதலால் செல்வமேயன்றிக் கல்வியின்மையும் வறுமையேயாம்.

(8)
 
 1. 
'மணமென.' 7. 8 - 6.