பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

212
வெல்லும் அழகு வாய்ந்த வெள்ளிய பற்களையுடைய இளமங்கையர்களுடன் காதல் மீக்கூர்தலினால் முத்துமுத்தாய் அளவளாவி மிக்க வேட்கையுடன் கூடி இன்புற்றிருந்தும் பயனென்? (சிவன் திருவடி நினைவு சிறப்புற இல்லாவிடின்.)

     "யோகத்தில் . . . . . . . . . துணிவிதன்றோ" - (புறத்தவமாம் போகநிலையினை விடுத்து) அகத்தவமாகிய யோகத்தை மேற்கொண்டு முறையாக மூச்சினையடக்கி, கையின்கண் உள்ள கூரிய நகங்களையே கொல்லும் படையாகக்கொண்டு கொடுமையுடன் திரியும் புலி, அரிமா, கரடிகள் நுழையும்படியான நுண்ணிய வாயில்களையுடைய காடுகளில் மலையுச்சியில் குகையூடு நெடுங்காலமிருந்தும் பயன் யாது? ஒலியடங்கிப் பேச்சற்ற பெருநிலையினைப் பெற்றவர்கள் திருவடிப் பேரின்புற்று உய்வார்கள்; இஃது அறிவான் மிக்க சனகர் முதலாயுள்ள நல்லார் துணிவேயாம்;

         "சர்வபரி . . . சிவமே" -

     (வி - ம்.) எந்நிலையிலிருப்பினும் இறைஞானம் கூடுமவர் திருவடியினைக் கூடுவர். இவ்வுண்மை வருமாறு :

     "நாடுகளிற் புக்குழன்றும்" (பக்கம் 104) என்பதனால் அறிக.

"வீட்டிலே சென்று வினையொழித்து நின்றிடினும்
 நாட்டிலே நல்வினைகள் செய்திடினும்-கூட்டில்வாள்
 சாத்தியே நின்றிலையேல் தக்கனார் வேள்வி செய்த
 மாத்திரமே யாங்கண்டாய் வந்து."
- திருக்களிற்றுப். 63
     பதினொராம் திருமுறையில் "புண்ணிய புராதன" எனத் தொடங்கும் பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாட்டினையும் நோக்குக.

(6)
 
கைத்தலம் விளங்குமொரு நெல்லியங் கனியெனக்
    கண்டவே தாகமத்தின்
  காட்சிபுரு டார்த்தமதில் மாட்சிபெறு முத்தியது
    கருதின்அனு மானமாதி
உத்திபல வாநிரு விகற்பமே லில்லையால்
    ஒன்றோ டிரண்டென்னவோ
  உரையுமிலை நீயுமிலை நானுமிலை என்பதும்
    உபாயம்நீ யுண்டுநானுஞ்