மோக மாதிதரு பாச மானதை | அறிந்து விட்டுனையும் எனையுமே | முழுது ணர்ந்துபர மான இன்பவௌ | மூழ்க வேண்டும் இதுஇன்றியே | தேக மேநழுவி நானுமோ நழுவின் | பின்னை உய்யும்வகை உள்ளதோ | தெரிவ தற்கரிய பிரம மேஅமல | சிற்சு கோதய விலாசமே. |
(பொ - ள்) "ஏகமானவுரு . . . உண்டு" - (ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்னும் திருமாமுறையின்படி) ஒன்றான நீ திருவருளினால் (உலகு உடல்களை மாயா காரியமாகப் படைத்தருளவும், எண்ணிறந்த உயிர்களை வினைக்கீடாக அவ்வுலகுடல்களோடு பொருத்திவைத்தருளவும்) பல திருக்கோலத்திருவுருவங்களாகி அளவிலாத அண்டங்களைப் படைத்தருள இசைந்தருளிய எல்லை எந்த நாளோ, அந்த நாள் முதலாக இந்நாள் வரையும், உன்னடிமையாகிய அடியேன் கூடவே பிறந்த பிறவிகளோ எண்ணிறந்தனவாயுள்ளன.
"நல . . . வேண்டும்" - (எனினும்) இம் மானுடப்பிறப்புச் சிறப்புக் கேதுவாகிய மிகுந்த கிடைத்தற்கரிய நல்லபிறப்பாகும்; (இப்பிறப்பினுள் நின்திருவருளால்) அறியவேண்டுவனவாகிய உறுதிப் பொருள்களை அறிந்து கொள்ளலாம்; மயக்க முதலியவற்றை ஓவாது தந்து கொண்டிருக்கின்ற வலிய பாசத்தை உள்ளவாறறிந்து, (அஞ்சிக்) கைவிட்டு, (விழுமிய முழுமுதல்வனாகிய) உன்னையும் (நின்திருவடிக்கு யாண்டும் நீங்கா அடிமையாகிய) அடியேனையும், முற்றும் தெளிய உணர்ந்து, மிகவும் மேலான பேரின்பப் பெருவெள்ளத்து மூழ்குதல் வேண்டும்;
"இது . . . உள்ளதோ" - (இத்தகைய அரும்பெரும் செயல்களை நின் திருவருளின் துணையால் செய்து கைவரப்பெறுதல்வேண்டும்) இஃது அல்லாமலே (வினைக்கீடாகிய) இவ்வுடம்பு அடியேனை விட்டு நீங்கி, அடியேனும் இவ்வுடம்பைவிட்டு நீங்கிவிடுவேனாயின், அதன்மேல் அடியேன் கரையேறிப் பிழைக்கும்வகை எளியேனுக்கு உண்டாகுமோ?
"தெரிவ . . . விலாசமே" -
(வி - ம்.) ஏகம் - ஒன்று. அனேகம் - பல. அகிலம் - உலகம்; அண்டம். சிருட்டி - படைப்பு. சனனம் - பிறப்பு. மோகம் - மயக்கம். பாசம் - மலம்; பற்று. நழுவுதல் - நீங்குதல்.
முதல்வன் பல்வேறு திருக்கோலங் கொண்டருளுமுண்மை வருமாறு: