பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

248
"ஒன்றும் பலவு மாய வேடத் தொருவர் கழல்சேர்வார்
 நன்று நினைந்து நாடற் குரியார் கூடித் திரண்டெங்கும்
 தென்றி யிருளிற் றிகைத்த கரிதண் சார னெறியோடிக்
 கன்றும் பிடியு மடிவா ரஞ்சேர் கயிலை மலையாரே."
- 1. 635.
     இவ்வுடம்பு நழுவின் மிக்க துன்பமாமென்னும் உண்மையினை, "உடம்பார்" (பக்கம் 197.) எனத் தொடங்கும் திருமந்திரத் திருப்பாட்டானு முணர்க.

(5)
 
நியம லட்சணமும் இயம லட்சணமும்
    ஆச னாதிவித பேதமும்
  நெடிது ணர்ந்திதய பத்ம பீடமிசை
    நின்றி லங்குமச பாநலத்
தியல றிந்துவளர் மூல குண்டலியை
    இனிதி றைஞ்சியவ ளருளினால்
  எல்லை யற்றுவளர் சோதி மூலஅனல்
    எங்கள் மோனமனு முறையிலே
வயமி குந்துவரும் அமிர்த மண்டல
    மதிக்கு ளேமதியை வைத்துநான்
  வாய்ம டுத்தமிர்த வாரி யைப்பருகி
    மன்னு மாரமிர்த வடிவமாய்ச்
செயமி குந்துவரு சித்த யோகநிலை
    பெற்று ஞானநெறி அடைவனோ
  தெரிவ தற்கரிய பிரம மேஅமல
    சிற்சு கோதய விலாசமே.
     (பொ - ள்) "நியம . . . இறைஞ்சி" - (யாவர்க்கும் யாண்டும் இன்பமே பயக்கும் நற்செயல்களை நினைந்தாக்குதல் ஆகிய) நியமத் தன்மையினையும், (அதுபோல் துன்பம் பயக்கும் தீச்செயல்களாகிய பொல்லாங்குகளை நீக்கலெனப்படும்) இயமத்தன்மையினையும், இருக்கை முதலானவற்றின் வேறுபாடுகளையும், ஆழ்ந்தெண்ணிச் செம்மையாக வுணர்ந்து, நெஞ்சத் தாமரையினிருக்கைமேல் நிலைபெற்றுத் திகழ்கின்ற அசபா மந்திரத்தின் அளவிடற்கரிய நன்மையின் தன்மையினை நன்குணர்ந்து, வளர்கின்ற மூலத்திடத்துள்ள குண்டலியாற்றலை (படர்ந்து, பரவிப் பணிந்து) இனிமையுற வணங்கி;

     "அவள் . . . வைத்து" - அக் குண்டலியாற்றலின் அருளினால் வரம்பின்றி வளர்கின்ற பேரொளி வண்ணமாகிய மூலத்தீயினொடு (பேச்சற்ற - வாய்வாளாத என்று சொல்லப்படும்) மோன மந்திர முறைமையினால்,