வெற்றி மிகுந்துவரும், அமிழ்தத்தையுடைய திங்கள் மண்டிலத்துக்குள்ளே அடியேனுடைய அறிவினைச் செலுத்தி;
"நான் . . . அடைவனோ" - அடியேன் வாய்வைத்து அமிழ்தப் பெருக்கினை ஆரப்பருகி, நிலைபெற்ற அவ்வமிழ்த வடிவமாய், ஓங்கிய வெற்றி மிகுத்து வருகின்ற, சித்தர்களுடைய (அகத்தவம் எனப்படும்) யோக நிலையினை எய்தி (நாலாம் நிலையாகிய) அறிவுப் படியினை அடைவனோ?
"தெரிவ . . . விலாசமே" -
(வி - ம்.) நியமம் - நலங்களையாக்குதல். இயமம் - பொலங்களைப் போக்குதல். ஆசனம் - இருக்கை. இதயபத்மம் - நெஞ்சத்தாமரை. பீடம் - இருக்கை. வயம் - வெற்றி. மதி - அறிவு. வாரி - பெருக்கம். சித்த - சித்தர். ஞானநெறி - அறிவுப்படி.
அகத்தவமாகிய யோக நிலையினை வருமாறுணர்க :
"அறுவகைப் பட்ட . . . . . . .
நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும்" - தொல். பொ. 75.
என்பதனான் உணர்க: எடுத்துக்காட்டு :
இயமம் : "பொய்கொலை களவே காமம் பொருணசை
இவ்வகை ஐந்து மடக்கிய தியமம்."
நியமம் : "பெற்றதற் குவத்தல் பிழம்புநனி வெறுத்தல்
கற்பன கற்றல் கழிகடுந் தூய்மை
பூசனைப் பெரும்பய மாசாற் களித்தலொடு
நயனுடை மரபி னியம மைந்தே."
இவற்றை வருமாறு நினைவுகூர்க : நீக்கலியமம் நினைந்தாக்கலே நியமம், நோக்கின் பொலநலமாம் நோன்பு.
ஆசனம் : "நிற்ற லிருத்தல் கிடத்தல் நடத்தலென்
றொத்த நான்கி னொல்கா நிலைமையோ
டின்பம் பயக்குஞ் சமய முதலிய
அந்தமில் சிறப்பி னாசன மாகும்."
வளிநிலை : "உந்தியொடு புணர்ந்த இருவகை வளியுந்
தந்தமியக்கந் தடுப்பது வளிநிலை."
தொகைநிலை : "பொறியுணர் வெல்லாம் புலத்தின் வழாமல்
ஒருவழிப் படுப்பது தொகைநிலை யாமே."
பொறைநிலை : "மனத்தினை யொருவழி நிறுப்பது பொறைநிலை."
நினைவு : "நிறுத்திய வம்மன நிலைதிரி யாமற்
குறித்த பொருளொடு கொளுத்த னினைவே."