பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

250
சமாதி : "ஆங்கனம் குறித்த வாய்முதற் பொருளொடு
         தான் பிறனாகாத் தகையது சமாதி."
     திருமந்திரத்தின்கண் 10. அட்டாங்க யோகப்பேறு என்னும் தலைப்பின்கீழ் வருவனவுங் காண்க :

     மேலும் வரும் திருமாமறைகளானுமுணர்க :

"ஊனி லுயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர்
 ஞான விளக்கினை யேற்றி நன்புலத்
 தேனை வழிதிறந் தேத்து வார்க்கிடர்
 ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே."
- 3. 22 - 3.
     அசபா மந்திர இயல்பினை ஆன்றோர் கூறுமுறை வருமாறு :

     "அசாபா காயத்ரீ என்பது ஓர் அரிய மந்திரமாகும். இது மந்திரங்களனைத்தினும் நனிமிகச் சிறந்ததாகும். இது ஹம்சம் ஸோஹம் என இருவகைத்தாய்த் திகழும். அசபா காயத்திரி யெனீனும், அசமையெனினும், உயிர்மந்திரம் எனினும், தோட்டிமந்திர மெனினும் ஒன்றே. இது முதற்கண் சிவபெருமானிடமிருந்து நந்திதேவரும், அவரிடமிருந்து நான்முகனும், அவரிடமிருந்து வெள்ளியும், அவரிடமிருந்து வேழமுனிவரும், அவர்பால் வியாழனும், அவர்பால் அகத்திய முனிவரும் பெற்றுப் பூமியின்கண் பரந்தது. இம் மந்திரத்தினை அன்புடன் கணிக்கின், இறந்தவர் துயிலினின்றும் எழுவார்போன்று எழுந்திருப்பர். மேலும் நினைந்தவையனைத்தும் கைகூடும். இம் மந்திரத்துக்கு உரிய தெய்வம் சிவபெருமான். உடனாந் தெய்வம் மூத்த பிள்ளையாராகிய தோட்டிக்கையன், வித்தாகிய பீசம் ஹம். ஆற்றலாகிய சத்தி சுவாகா. வடிவமுதலாகிய கீலகம் ஸோகம். கைதொடலாகிய கர நியாசஞ் செய்து, உரிய மந்திர உறுப்பாகிய பல்லவத்தால் உறுப்புத் தொட்டு வைகறைச் செவ்வானப் பொழுதில் கணிக்கத் தொடங்கி ஞாயிறு மறைவதற்குள் இருபத்தோராயிரத்து அறுநூறு உருக்கணித்தல் வேண்டும். இவ்வெண்ணிக்கை உயிர்ப்பின் எண்ணிக்கையினை ஒத்துள்ளது காண்க. (மூத்த பிள்ளையாருக்கு உரு அறுநூறு. அயனுக்கும் அரிக்கும் அறுநூறே. பெண்ணொரு கூறனுக்கு ஆறாயிரம். ஆன்ம உயிருக்கு ஆயிரம். பேருயிராகிய பரமான்மாவிற்கு ஆயிரம். மெய்யுணர்வுக் குரவனுக்கு ஆயிரம். இவ்வாறாக அசபா காயத்திரி மந்திரம் கணித்தல் வேண்டும்.) உன்னாமலுன்னுமுரை மந்திரமென்றோதுவரால், பொன்னாம் உயர்ந்தோர் புகழ்ந்து.

(6)