பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

251
எறிதி ரைக்கடல் நிகர்த்த செல்வமிக
    அல்ல லென்றொருவர் பின்செலா
  தில்லை யென்னுமுரை பேசி டாதுலகில்
    எவரு மாமெனம திக்கவே
நெறியின் வைகிவளர் செல்வ மும்உதவி
    நோய்க ளற்றசுக வாழ்க்கையாய்
  நியம மாதிநிலை நின்று ஞானநெறி
    நிட்டை கூடவுமெந் நாளுமே
அறிவில் நின்றுகுரு வாயு ணர்த்தியதும்
    அன்றி மோனகுரு வாகியே
  அகில மீதுவர வந்த சீரருளை
    ஐய ஐயஇனி என்சொல்கேன்
சிறிய னேழைநம தடிமை யென்றுனது
    திருவு ளத்தினிலி ருந்ததோ
  தெரிவ தற்கரிய பிரம மேஅமல
    சிற்சு கோதய விலாசமே.
     (பொ - ள்) "எறிதி . . . கூடவும்" - கரைமோதுகின்ற கடலினின்று எழும் பெரிய அலைகளை யொத்த பெருஞ் செல்வம் (யாண்டும் எவர்க்கும்) மிக்க அல்லலே தரும்; (அதனால் செல்வத்தை முற்றாக வெறுத் தொதுக்குவதும் பொருத்தமாகாது;) எனவே செல்வமறவே இல்லாமல் ஒருவர் பின் அச் செல்வத்தின் பொருட்டுச் செல்லா நிலைமையும், (என்பின் வந்து இரப்பவர்க்கு எக்காலத்தும்) இல்லையென்னும் எவ்வம் உரையாது ஈத்துவக்கும் படியாகவும், யாவர்களும் அடியேன் ஒப்புரவு செய்து வாழும் வாழ்வு வாய்ப்புளதென்று மதிக்கும்படியாகவும், நன்னெறியில் உறைத்து நின்று வாழத்தக்க வளரும் செல்வமும், அடியேனுக்கு உதவியருளி நோயற்ற இன்ப வாழ்க்கையாய், செய்யத்தக்க கடமைகளாகிய நியம முதலாகச் சொல்லப்படும் அனைத்தினிலும் வழுவாது நிலைநின்று, அறிவுநெறியாகிய ஞான நன்னெறியினைப் பொருந்தி அழுந்தியறிவதாகிய நிட்டை நிறைபேறு கை கூடவும்;

     "எந்நாளுமே . . . சீரருளை" - (உணர்விற் குணர்வாய் அடியேனை விட்டு நீங்காது) எந்நாளும் அடியேன் அகத்தே அறிவினுள் நின்று சிவகுருவாய் உணர்த்தியருளி வருவது மல்லாமல் (புறத்தே) வாய்வாளா மோனகுருவாகிய இந் நிலவுலகத்தின்மீது எழுந்தருளும்படியாக வந்தருளிய நின் திருவருளை;

     "ஐய . . . இருந்ததோ" - முதல்வனே! முதல்வனே! எளியேன் மேலும் என் சொல்கேன்? நனிமிகச் சிறியேன் ஏழையேன் யான்