பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

256
     (பொ - ள்) "மத்தர் . . . என்னை" - மயக்கங்கொண்டவரும், பேய் பிடிகொண்டவரும், பாலுண் குழந்தையும் (முறையே ஒருகாற்செய்து ஒருகால் ஒழிதலும், செயலிழப்பின் நின்று செய்தலும், அறவொழிதலும் ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டியவர்) ஆகிய இவர்தம் குணத்தினைப் பொருந்தி, நாலாம் வடிவம் எனப்படும் தூய (துரிய) உருவமாகி நிலைபெற்று இடங் காலம் முதலியவற்றை முற்றும் மறந்து, உன்னுடைய மெய்யடியார் தம் திருவடியின்கண் பெரும் பத்தியாய் முற்றாக நம்பியொழுகும் எளியேனை;

     "ஒரு மையல் . . . இல்லை" - ஒரு வகையான நீங்காப் பெருமயக்கத் தைத்தந்து, இவ்வுலகமாகிய மாயையை (நன்றாக உற்றுற்றுப்) பார்ப்பாயாக, பார்ப்பாயாக என்று செலுத்தி நடத்த வந்தது யாது? (இத்தகைய மயக்கத்தை உண்டாக்குவதொன்று போரும் பிறவும் பெருகப் புனைந்துரைக்கும்) பாரதக் கதைகளிலும் கண்டதுண்டோ? என்றும் அழிவில்லாத கலப்பற்ற இயற்கையாகுமோ? உன் திரு ஆணையான் நிகழும் உலக மாயையின் மெய்ம்மையினை நடுநிலையாகக் கூறியருளுதல் வேண்டும்; (நன்மைபோற் புனைந்து கூறப்படும் மாயை உண்மையினைத் தெளிவிக்க வந்த) காதிகதை சொல்லுகின்ற மாயையியல்பினும் இவ்வாறு காணப்படுவதற்கில்லை;

     "என்சித்த . . . பேறிதோ" - அடியேனுடைய நாட்டமாகிய சித்தம் இவ்வகையாக மயக்கங்கொண்டு உழல்வது ஒவ்வுமோ? உன்னுடைய (நீக்கமின்றி நிற்கும் வனப்பாற்றலாகிய) திருவருளைப் பொருளென நம்பி நாளும் நடப்பவர் பெறுகின்ற பேறு இதுதானோ?

         "தெரிவ . . . விலாசமே" -

     (வி - ம்.) மத்தர் - மயக்கங்கொண்டவர்; வெறியர், உன்மத்தர் என்பதும் இதுவே. தேசம் - இடம். நெடிது - மிகுதி. அகிலம்-உலகம், உன்மத்தர் - பித்துக்கொண்டவர்.

     பித்தர்கள் தம்மைப்பற்றியும், தமக்கு இன்பத்துன்பங்கள் இயற்றினாரைப் பற்றியும் நினைந்துணரார். பேய்பிடியுண்டார் பேய்க்குக் கைக் கருவியாக நிற்பர். அவரால் செய்யப்படும் செயலனைத்தும் பேயின் செயலே. அவற்றின் பயனும் அப் பேய்க்கேயாம். ஆனால், உலகில் அவ்வுண்மையுணரார் அனைவரும் அப் பேயால் பிடிக்கப்பட்டோர் செய்கை யெனவும் சொல்வர். பாலர் பசித்த காலத்து அழுதலும், ஊட்ட உண்ணலும், உறங்கலும், காட்டக் கைக்கொள்ளலும், கலந்தார்பால் அன்புகொள்ளலுமன்றி வேறு எவ்வகை விருப்பமு மிலராவர். இந் நிலைமையே மெய்யுணர்வு கைவந்த தவத்தோருக்குமாம். இவ்வுண்மை வருமாறு:

"ஞாலமதின் ஞானநிட்டை யுடையோ ருக்கு
    நன்மையொடு தீமையிலை நாடுவதொன் றில்லை
 சிலமிலை தவமில்லை விரதமொடாச் சிரமச்
    செயலில்லை தியானமிலை சித்தமலம் இல்லை