பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

300
கண் அயனுடைய வெண்டலையும், அவர்தம் திருவடியின்கண் அரியின் மலர்க்கண்ணும் விளங்கிக் கொண்டிருக்கின்றன. அங்ஙனம் விளங்கியருளுமாறு நின்ற முதல்வன் யாவன்? அவனே அழிவில்லாத விழுமிய முழு முதல்வன் ஆவன்.

     (வி - ம்.) நிலையாப்பொருள்களைத் திருவருட்டுணையாற் கழித்துக்கொண்டே சென்றால் நிலைத்த உண்மை அறிவுஇன்ப வடிவினனான சிவபெருமான் வெளிப்பட்டருள்வன். இங்ஙனம் ஆயும் ஆய்வினுக்குக் கழிப்புமுறை என்றுபெயர். வாழைத்தண்டாம் மெய் வரும்வரையும் ஒவ்வொன்றா, வாழைமட்டைகளை நீக்குதல் இதற்கொப்பாகும்.

(3)
 
விளங்கவெண் ணீறுபூசி விரிசடைக் கங்கை தாங்கித்
துளங்குநன் னுதற்கண் தோன்றச் சுழல்வளி நெடுமூச் சாகக்
களங்கமி லுருவந் தானே ககனமாய்ப் பொலியப் பூமி
வளர்ந்ததா ளென்ன உளள மன்றென மறையொன் றின்றி.
     (பொ - ள்) "விளங்கவெண் . . . தோன்ற" - (அனைத்துயிரும் ஆர்வமுடன் உய்ய அருள்வழிநிற்றல்வேண்டும். அப்பொழுது மாயாகாரியப் பொருள்களின் நிலையாமை உணர்ச்சி உள்ளத்தெழும்) அவ்வுண்மை விளங்குமாறு திருவெண்ணீறு பூசிக்காட்டியும், விரித்ததிருச்சடையின் கண் (ஆருயிர்கட்குப் பிறப்பினை நல்கிச் சிறப்பினை எய்தும்படி நடத்திக் கொண்டுபோகும்) நடப்பாற்றலாகிய கங்கையினைத் தாங்கியும், மிக்க ஒளியினைத் தருகின்ற தழற்கண்ணினை நெற்றியின்கண் தோன்றுமாறு அருளியும்;

     "சுழல்வளி . . . இன்றி" - எங்கணும் இடையறாது வீசிக்கொண்டிருக்கும் காற்றினையே தனக்கு உயிர்ப்பாகவும், காற்றினுக்கிடமாய் அதனையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் "வறிது நிலைஇய காயம்" எனப்படும் வானமே தன்உருவாய்ப் பொலியவும், நிலம் நீண்டதிருவடியாகத்திகழவும், திருச்சிற்றம்பல மெனப்படும் பொன்னம்பலம் நெஞ்சமாகவும், மறைவேது மின்றி வெளிப்படையாகவும் (வீற்றிருந்தருள்கின்றனன் சிவன்.)

     (வி - ம்.) சிவபெருமான் திருவெண்ணீறணிவது நாமெல்லாம் அவ்வெண்ணீறணிந்து அவன் திருவடிக்கீழ்த் தலைமறைவாய்த் தாடலை போற் கூடிப் பேரின்பம் நுகர்ந்து பெருவாழ்வு பெறுதற்கே யாம். சிவபெருமான் நெற்றிக்கண்ணினை நேருற விளக்கல்: அம்மையார் விளையாட்டு விருப்பான் அப்பன்திருக்கண்கள் இரண்டினையும் பொத்தியருளினர். உலகமுற்றும் ஞாயிறுதிங்கள்கள் இருந்தும் பேரிருள் மூடிவிட்டது. அப்பொழுது சிவபெருமான் தன் நெற்றிக் கண்களைத் திறந்தருளினன்; இருளகன்றது; ஒளி உண்டாயது.

     அப்பொழுது அம்மையார் அஞ்சித் தம் திருக்கைகளை எடுத்தனர். கைவிரல்கள் நடுநடுங்கி வியர்வை உண்டாயது. அது பெருவெள்ளப் பேராறாகப் பெருகி உலகினை அழித்து விடுவது போல் செருக்குடன்