பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

356
     (பொ - ள்) மறையெனப்படும் வேதம் நடந்து செல்லும் வழியாகவும். முறையெனப்படும் ஆகமம் அவ்வழியிற் செல்லுதற்கு விட்டு நீங்காது தாங்கிச் செல்லும் குதிரையாகவும் அமைந்துள்ளன. இவ்விரண்டும் நின்திருவருளால் வியத்தகு செயலாக நிகழ்த்தியருளுகின்றனை. இவ்வுண்மையினை உணர்த்தியருள்வன நின் அறிவுக்குறியாம் திருக்கையும். அன்பறிவாற்றலாகிய மூன்று திருக்கண்களும் சிவனெனற்கு உரிய செம்மேனியும் என்ப. இவற்றையுடைய அடியேன் கண்ணே! திருவருளால் பெருநிறைவாம் அறிவின்கண் கண்டிலம். அதனால் நின்திருவடியினைச் செந்தமிழ்ச் சிறப்பாம் போற்றிமந்திரம் புகன்று அந்நினைவுடனிருந்து இந்நிலவுலகம் உள்ளவரையும் நின்திருவடியை வணங்கும்படி அடியேன் விரும்பிக் கொள்ளத்தகும்.

     மறைமுறையுண்மை வருமாறு :

"வேதமோ டாகமம் மெய்யாம் இறைவன் நூல்
 ஓதும் பொதுவுஞ் சிறப்புமென் றுள்ளன
 நாதன் உரையவை நாடில் இரண்டந்தம்
 பேதம தெனபர் பெரியோர்க் கபேதமே."
- 10. 2358
(1)
 
இடமொரு மடவாள் உலகன்னைக் கீந்திட்
    டெவ்வுல கத்தையு மீன்றுந்
தடமுறும் அகில மடங்குநா ளம்மை
    தன்னையு மொழித்துவிண் ணெனவே
படருறு சோதிக் கருணையங் கடலே
    பாயிருட் படுகரிற் கிடக்கக்
கடவனோ நினைப்பும் மறப்பெனுந் திரையைக்
    கவர்ந்தெனை வளர்ப்பதுன் கடனே.
     (பொ - ள்) உலகன்னையாராகிய உமையம்மையாரை உலகுய் தற்பொருட்டுத் தன்திருமேனியின்கண் இடப்பாகம் முழுதுமாய் வைத்தருளி, அவள் வாயிலாக உலகனைத்தையும் படைப்பித்தும் மீண்டும் பெருமைமிக்க அவ்வுலகினை ஒடுக்குங்கால் அவள் தன்னையும் தன்னுள் ஒடுக்கி ஒடுக்குவித்தும் பேரறிவுப் பெருவெளியாக எங்கணும் பரந்து நிற்கும் பேரொளிப் பேரருட் கடலே' பரந்த ஆணவவல்லிருட்குட்டத்தில் அடியேன் கரையேறாது கிடந்து அழுந்தக் கடவேனே? நினைப்பு மறப்பென்னும் நீங்காப் பெருந்திரையை நின் அருளினால் நீக்கி அடியேனை எடுத்து வளர்ப்பது நின் அருட்கடனாகும்.

     அம்மையைத் தன்னுள் அடக்கும் உண்மை வருமாறு :

"பெண்ணுரு வொருதிற னாகின் நவ்வுருத்
 தன்னு ளடக்கிக் கரக்கினும் கரக்கும்"
- புறநானூறு, கடவுள் வாழ்த்து
(2)