பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

361
நிலையாமையுடைய தென்பதாம். மெய்ம்மை யென்பது தோற்றம் ஒடுக்கம் எய்தாது காரண நிலையாய் என்றும் பொன்றாது ஒன்றுபோல் நின்று நிலவுவது. விழுமிய முழுமுதல்வன் வினைமுதற்காரணம்; மாயை பொருண்முதற் காரணம்; வினை ஊக்கக்காரணம்; ஆருயிர் நில்லாவுலகப் பொல்லா அடிமையினின்று நீங்கி நிலைத்ததிருவடிக்கு அடிமையாதற்காம் அறிவுக் காரணம்; மலம் அறிவு விளங்க வொட்டாது தடுத்தற்குரிய தடைக்காரணம். வினைமுதற் காரணம் நிமித்த காரணம், பொருண்முதற்காரணம் முதற் காரணம். திருவருட்கு இருவினையும் மாயையும் கைக்கருவி போன்று துணைக்காரணமாக நிற்பன.

     சிவகுருவருளால் கருவுரு நிலை ஆருயிர்களுக்கு உண்டாகாதென்னும் உண்மை வருமாறு :

"கறுத்த இரும்பே கனகம தானான்
 மறித்திரும் பாகா வகையது போலக்
 குறித்தஅப் போதே குருவருள் பெற்றான்
 மறித்துப் பிறவியில் வந்தணு கானே"
- 10. 2013.
     திருவடி எய்தினாரனுபவநிலை அறிவு புறத்துப் போகாமை அவ்வுண்மை வருமாறு :

"மலமில்லை மாசில்லை மானாபி மானங்
 குலமில்லை1 கொள்ளுங் குணங்களு மில்லை
 நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே
 பலமன்னி யன்பிற் பதித்துவைப் போர்க்கே."
- 10. 2917.
(9)
 
வடிவிலா வடிவாய் மனநினை வணுகா
    மார்க்கமாய் நீக்கருஞ் சுகமாய்
முடிவிலா வீட்டின் வாழ்க்கைவேண் டினர்க்குன்
    மோனமல் லால்வழி யுண்டோ
படியிரு ளகலச் சின்மயம் பூத்த
    பசுங்கொம்பை யடக்கியோர் கல்லால்
அடியிலே யிருந்த ஆனந்த அரசே
    அன்பரைப் பருகும்ஆ ரமுதே.
     (பொ - ள்) மெய் வாய் கை கால் முதலிய உறுப்புகளில்லாத சிவக்கொழுந்தின் வடிவாய் உள்ளஞ் சென்று பற்றொண்ணாத நெறியாய், விட்டுவிலகாது ஒட்டி யுறுவதாய் பேரின்பமயமாய், அழிவில்லாதிருக்கின்ற திருவடிப் பேரின்பப் பெருவாழ்வைக் கனவினும் நனவினும் காதலிப்பவர்கட்கு மோனங் கைக்கொள்ளுவ தல்லாது பிறிது வழியுண்டோ? ஆருயிர்களைப் பண்டே புல்லியுள்ள ஆணவ

 
 1. 
'ஞாலமதின்.' சிவஞானசித்தியார், 8. 2 - 22.