ஆசைக்கோ ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி | ஆளினுங் கடல்மீதிலே | ஆணைசெல வேநினைவர் அளகேசன் நிகராக | அம்பொன்மிக வைத்தபேரும் | நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர் | நெடுநா ளிருந்தபேரும் | நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி | நெஞ்சுபுண் ணாவர்எல்லாம் | யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும் | உறங்குவது மாகமுடியும் | உள்ளதே போதும்நான் நான்எனக் குளறியே | ஒன்றைவிட் டொன்றுபற்றிப் | பாசக் கடற்குளே வீழாமல் மனதற்ற | பரிசுத்த நிலையை அருள்வாய் | பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகி்ன்ற | பரிபூர ணானந்தமே. |