சூழ்பெரும்பே ரொளியையொளி பரந்தபர | வெளியை இன்பச் சுகத்தை மாறா | தேழுலகுங் கலந்தின்றாய் நாளையா | யென்றுமாம் இயற்கை தன்னை. |
(பொ - ள்.) மன்னும் வையத்து வாழ்வனைத்துந் தந்தருளிய பேரின்பப் பெருங்கடலை, அறந்தவா அமிழ்தை, செம்மணியாம் மாணிக்கத்தை, செம்பொன்னை, கீழ்மை அறுமாறு அடியேன் உள்ளத்திருந்த மெய்ப்பொருளை, மூவாமுத்திற முழுப்புணர்ப்பாஞ் சுத்தாத்து வித இன்பசாரத்தை, எங்கணுஞ்சூழும் பேரறிவுப் பேரொளியை, அவ்வொளிபரந்த திருவருள் வெளியை; பேரின்பினை; நீங்காது ஏழுலகினுங்கலந்து, இன்றும், நாளையும் 1 இனி என்றும் உள்ளதாகித் திகழும் மாறா இயற்கைத் திருவினை.
(4)
தன்னையறிந் தவர்தம்மைத் தானாகச் | செய்தருளுஞ் சமத்தை லோகம் | மின்னைநிகர்த் திடஅழியாச் சொரூபானந் | தச்சுடரை வேத மாதி | என்னையறி வரிதென்னச் சமயகோ | டிகளிடைய இடையறாத | பொன்னைவிரித் திடுமுலகத் தும்பரும்இம் | பரும்பரவும் புனித மெய்யை. |
(பொ - ள்.) மாயாகாரியமாகத் திகழும் உலகு உடல்களின் வேறெனத் திருவருளால் தன்னையுணர்ந்தவர் தன்னை யறிந்தவராவர். அத்தகையோரைத் தன் வண்ணமாகச் செய்தருளும் பேராற்றற் பெரும்பொருளை, இம்மண்ணுலகம் வானமின்னலை ஒத்திடவும், தான் என்றும் அழியாது நின்று நிலவும் பேரின்பமே வடிவமாகிய பெருஞ்சுடரை, மறை முதலிய நூல்கள் அறிதற்கரிதென்று முறையிடவும், எண்ணிலாச் சமயகோடிகள் காணவொண்ணாதெனப் பின்னடையவும், பொன்னுலகத்துத் தேவர்களும், மண்ணுலகத்தவர்களும் படர்ந்து, பரவிப், பணிந்து வணங்கவும் திகழ்கின்ற தூயமெய்ப் பொருளை, படர்தல் - உள்ளல். பரவல் - உரைத்தல்.
தன்னையறிந்தார் தாளடைவார் என்னுந் தன்மை வருமாறு :-
| "தன்னிற் றன்னை யறியுந் தலைமகன் |
| தன்னிற் றன்னை யறியிற் றலைப்படும் |
| தன்னிற் றன்னை யறிவில னாயிடில் |
| தன்னிற் றன்னையுஞ் சார்தற் கரியனே." |
| - 5. 97 - 30. |
(5)
1. | 'இருநிலனாய்த்' 6. 94 - 1. |