பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

490

தனிமுதலே (அறம் பொருள் இன்பம் வீடென்னும் அந்நான்கினையும் அந்தணனாய் ஆல நீழலிருந்து அந்தண்மையோடு சிவனுரைத்தருளிய1 செந்தமிழ்) நான்மறையின் பண்கள் விளங்குகின்ற பேரின்பப் பெருமுதலே, மேலாம் தனிப் பெருந்தலைவனே!

     (வி - ம்.) விண்ணாறு - வான்புனல். கண்ணாறு - கண்ணீராகிய ஆறு. தண்ணாறு - தண் நாறு - குளிர்ச்சிமிகுகின்ற. பண் நாறு - பண் விளங்குகின்ற. அழுதாற்பெறலாம் என்னும் உண்மை வருமாறு:

"யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும்பொய்
 ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
 தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
 மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே."
- 8. திருச்சதகம், 90.
(6)
கூடியநின் சீரடியார் கூட்டமென்றோ வாய்க்குமென
வாடியஎன் நெஞ்சம்முக வாட்டமும்நீ கண்டிலையோ
தேடியநின் சீரருளைத் திக்கனைத்துங் கைகுவித்துப்
பாடியநான் கண்டாய் பதியே பராபரமே.
     (பொ - ள்.) உள்ளமும் உரையும் உடலும் ஆகிய மூன்றும் நின் திருவடிக்கண் யாண்டும் ஒருங்கு கூடிய நின் தொன்மைச்சிறப்பினையுடைய மெய்யடியார்தம் திருக்கூட்டம் அடியேனுக்கு எந்நாள் வாய்க்குமோ என்று வாடிய எளியேன் நெஞ்சமும், அதனால் ஏற்பட்ட முகவாட்டமும் நீ பார்த்தருளவில்லையோ? மெய்யன்பர்களால் தேடப்பட்ட நின்னுடைய சிறந்த திருவருளை எல்லாத் திசைகளையும் நோக்கி அடியேன் உச்சிமேற் கைகுவித்துக் காதலுடன் பாடிக் கொண்டிருக்கும் பணியினேன்2 கண்டருள்வாயாக; விழுமிய தலைவனே! மேலாம் தனிப்பெரு முதலே!

(7)
நெஞ்சத்தி னூடே நினைவாய் நினைவூடும்
அஞ்சலென வாழுமென தாவித் துணைநீயே
சஞ்சலமாற் றினைஇனிமேல் தாய்க்குபசா ரம்புகன்று
பஞ்சரிக்க நானார் பதியே பராபரமே.
     (பொ - ள்.) அடியேன் நெஞ்சத்தினுள்ளே3 நினைவாகநின்று அருளியும் அந் நினைவினகத்து நின்று அஞ்சற்க என உணர்த்தி வாழ்ந்தருள்கின்ற அடியேன் ஆருயிர்த்துணையே! தேவரீரே அடியேன் மனவாட்டத்தினை மாற்றியருளினீர்; இனிமேல் தாயினும் சிறந்த நின் திருவடிக்கு எளியேன் விண்ணப்பித்துக் கொள்ளு முகமனுரையைச் சொல்லுதற்கும் மன்றாடுதலாகிய பஞ்சரித்தற்கும் அடியேன் என்ன உரிமையுடையேன்? தலைவனே! மேலாம் தனிப்பெரு முதலே!

(8)
 
 1. 
'சுழிந்தகங்கை.' 1. 53 - 6. 
 2. 
'மனத்தகத்தான்.' 6. 8. 5. 3. 'வாயானை.' 7. 19 - 8.