பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

495

"வினைகடிந் தாருள்ளத் துள்ளொளி மேவித்
 தனையடைந் தோர்க் கெல்லாந் தத்துவ மாய்நிற்பன்
 எனையடி மைகொண்ட ஏந்திழை ஈசன்
 கணவனைக் காண அனாதியு மாமே."
- 10. 1099
(5)
பத்திநீ பத்திக் கான பலனுநீ பலவாச் சொல்லுஞ்
சித்திநீ சித்தர் சித்தித் திறமுநீ திறமார் மோன
முத்திநீ முத்திக் கான முதலுநீ முதன்மை யான
புத்திநீ எனக்கொன் றுண்டோ பூரணா னந்த வாழ்வே.
     (பொ - ள்.) உண்மையான காதல் முதிர்ந்து முறுகின நன்னிலை எனப்படும் பத்தி; (அத்தகைய பத்தி வடிவமும் நீயே, அப் பத்தியினை மேற்கொண்டொழுகிய நல்லார்க்குக் கொடுத்தருளும் பத்திப் பெரும் பயனாம் பேரின்பமும் நீயே,) பலவகையாக நவிலப்படும் அகத்தவப்பேறாம் சித்தியும் நீயே, அச் சித்திகளின் விரிவும் நீயே, இத்திறத்தால் விளையும் மோன வீடுபேறாம் முத்தியும் நீயே, அம் முத்தியினையருளும் மூவாச் சாவா முதல்வனும் நீயே, அடியேன் பெறவேண்டிய உண்மை மூதறிவும் நீயே, (இங்ஙனமாக இருப்பதால்) அடியேனுக் கெனத் தனிமுதன்மையுண்டெனக் கூறவும் முறையுண்டோ? மூவா முழு நிறைப் பெருவாழ்வே.

     (வி - ம்.) சிவபெருமான் எல்லாமாய் நிற்கும் எண்மை உண்மை வருமாறு:

"அறிவானுந் தானே யறிவிப்பான் றானே
 அறிவா யறிகின்றான் றானே - யறிகின்ற
 மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பா ராகாசம்
 அப்பொருளுந் தானே யவன்."
- 91 - அம்மை - அற்புதத் - 20
     சிவபெருமான் ஆருயிர்களுடன் பிரிப்பின்றிக் கலந்து ஒன்றாய் நிற்கும் நிலையில் அறிவான் எனவும், பொருட்டன்மையாய் வேறு நிற்கும் நிலையில் அறிவிப்பான் எனவும், உயிர்க்குயிராய் உதவி உடனாய் நிற்கும் நிலையில் அறிகின்றான் எனவும், கொள்ளத்தகும் மெய்ம்மை இத் திரு வெண்பாவின்கண் காரைக்கால் அம்மையாரால் அருளிச் செய்யப்பட்டமை காண்க.

(6)
தாயினும் இனிய நின்னைச் சரணென அடைந்த நாயேன்
பேயினுங் கடைய னாகிப் பிதற்றுதல் செய்தல் நன்றோ
தீயிடை மெழுகாய் நொந்தேன் தெளிவிலேன் விணே காலம்
போயின தாறற கில்லேன பூரணா னந்த வாழ்வே.
     (பொ - ள்.) "பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிவுடைய" இனியனாம்1 நின்திருவடியினை நிலைத்த புகலென அடைந்த நாயேன்

 
 1. 
'தாயினும்.' 5. 100 - 9.