(பொ - ள்.) வாலறிவுப் பேரொளிப் பிழம்பாய், அறிவை மறைக்கும் ஆணவ வல்லிருட் கூட்டத்தைக் கொள்ளையிடும் திருச்சிற்றம்பலமென்னும் தூவெளியே, அடியேனை விடாமல் எந்நாளும் தொடர்ந்து பற்றிப் பிறவிப் பெருந்துன்பத்தை விளைக்கும் இருவினைப் பகையை வென்றருளும் இன்ப வாழ்வே, இவ்விடத்து உன்னைவிட்டுப் பிரிந்து மயங்குகின்றேன்.
(23)
மயக்குறுமென் மனமணுகாப் பாதை காட்டி | வல்வினையைப் பறித்தனை யேவாழ்வே நானென் | செயக்கடவேன் செயலெல்லாம் நினதே என்று | செங்கைகுவிப் பேன் அல்லாற் செயல்வே றில்லை. |
(பொ - ள்.) மயக்கத்தைச் செய்கின்ற அடியேனுடைய மனமானது பொருந்தாத வழியைக் காட்டி, என் கொடிய வினையைப் பறித்தழித்தனையே, எங்கள் பெருவாழ்வே, நீ செய்த திருவருட்கு அடியேன் என்ன கைம்மாறு செய்யக்கடவேன்? உண்மையுணர்ந்தால் எல்லாச் செயலும் நின் திருவருட் செயலேயாதலால் நின் செயலதென்றே கை குவித்துத் தொழுவேன்: அதுவல்லாமல் எளியேனுக்கு வேறு செயல் ஒன்றுமில்லை.
(வி - ம்.) உண்மையுணர்ந்த மெய்யடியார்கள் உன்னடியேன் செய்பணிகள் உன் தொண்டே உன்னருளே, உன்னடிக்கே ஒப்புவித்தேன் ஓர்ந்தென்று கைகூப்பித் தொழுவர். இவ்வுண்மை வருமாறு:
| "யாதே செய்து மியாமலோ நீயென்னில்1 |
| ஆதே யேயு மளவில் பெருமையான் |
| மாகே வாகிய வாய்மூர் மருவினார் |
| போதே யென்றும் புகுந்ததும் பொய்கொலோ." |
| - 5. 50. 6. |
(24)
வேறுபடுஞ் சமயமெல்லாம் புகுந்து பார்க்கின் | விளங்குபரம் பொருளேநின் விளையாட் டல்லால் | மாறுபடுங் கருத்தில்லை முடிவில் மோன | வாரிதியில் நதித்திரள்போல் வயங்கிற் றம்மா. |
(பொ - ள்.) ஒன்றோடொன்று ஒவ்வாமல் முரண்பட்டுக்கொண்டிருக்கும் இருபத்துநான்கு வகைச் சமயங்கள் அனைத்தினையும் புகுந்து ஆராய்ந்து பார்க்குமிடத்து அனைத்திற்கு மேலாகத் திகழும் தனிமுதற்பொருளே, நின்னுடைய திருவிளையாடலேயல்லாமல் மாறுபாடு எய்துங் கருத்துகள் இல்லையாகும். முடிவில்லாத மவுனப் பெருங்கடலில் (ஆற்றுப் பேரற்றுக் கடலின்பேருற்று) ஆறுவிளங்கினாற்போல் விளங்கிற்றென்க.
1. | 'அன்றேயென்றன்.' 8. குழைத்தபத்து. 7. |
" | 'அஞ்செழுத்தோதி.' 12. சிறப்புலி - 5. |