பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

523

     (வி - ம்.) சிவபெருமானின் திருவிளையாடல்1 என்பது பள்ளி வகுப்புப் போலவும், பயிற்சித்துறைகள் போலவும், மாந்தர் வளர்ச்சி போலவும் மேன்மேல் உயர்ந்துவர அவ்வந்நிலைகளுக்கேற்றவாறு நூலும், கருவியும், நுண்ணறிவும் பொருந்தத்துணைநின்றருள்வது.

(25)
அம்மாஈ ததிசயந்தான் அன்றோ அன்றோ
    அண்டநிலை யாக்கிஎன்னை அறிவாம் வண்ணஞ்
சும்மாவே இருக்கவைத்தாய் ஐயா ஆங்கே
    சுகமயமாய் இருப்பதல்லாற் சொல்வான் என்னே.
     (பொ - ள்.) வியப்பாகும் : இது வியப்பே, வியப்பே அல்லவோ அகன்ற நிலையாகிய வியாபகத்தினுள் அடங்கு நிலையாகிய வியாப்பியமாக்கி அடியேனை அறிவாகும் வண்ணம் சிவனே என்றிருக்க வைத்தருளினை; ஐயனே. அங்கே இறவாப் பேரின்ப எழில்வடிவாக இருப்பதல்லாமல் வேறு சொல்லுவதற்கு என்னிருக்கிறது? (ஏதும் இல்லை யென்பதாம்.) சும்மா இருத்தல் - சிவனே என்றழுந்தியிருத்தல்.

(26)
என்னேநான் பிறந்துழல வந்த வாறிங்(கு)
    எனக்கெனஓர் செயலிலையே ஏழை யேன்பால்
முன்னேசெய் வினையெனவும் பின்னே வந்து
    மூளும்வினை யெனவும்வர முறையேன் எந்தாய்.
     (பொ - ள்.) இவ்விடத்து எளியேன் பிறந்து இறந்து உழலுமாறு வந்த முறை யாது? (உயிரையன்றி உடலுக்குச் செயலில்லாமை போன்று உயிர்க்குயிராகிய தேவரீரையன்றி) எனக்கெனவோர் செயலில்லையே2 ஏழையேன்பால் முன்னே செய்வினையெனவும், மூளும் பின்னைவினையெனவும் வருதற்கு எந்தையே! முறை யாது?

     (வி - ம்.) முன்வினையென்பது ஊழ், பின்னே வந்து மூளும்வினை ஆகாமியம். இவை ஏன்றவினை யெனவும் ஏறுவினை எனவும் கூறப்படும்.

(27)
தாயான தண்ணருளை நிரம்ப வைத்துத்
    தமியேனைப் புரவாமல் தள்ளித் தள்ளிப்
போயான தென்கொல்ஐயா ஏக தேசம்
    பூரணத்துக் குண்டோதான் புகலல் வேண்டும்.
     (பொ - ள்.) அடியேனுக்குத் தாயாகிய தண்ணருளை நிறைய வைத்துத் தமியனாகிய எளியேனைப் பாதுகாவாமல் நீக்கி நீக்கி வைத்ததனால் உண்டான பயன் யாது? ஐயனே எங்கும் அகல்நிறைவாய் நின்றருளும் நின்னியல்புக்கு ஒருபுடையென்னும் ஏகதேசமுண்டோ? திருவாய்மலர்ந்தருள்வாயாக. தமி - தனி. ஏகதேசம் - வரையறை.

 
 1. 
'யாதொரு' சிவஞானசித்தியார், 2 - 2. 22.  
 2. 
'சலமிலனாய்' " 10, 2 - 2.