பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


691


அகலம் பெறவுயர்ந்து விபுலம் பெறவளர்ந்து
     சபலஞ் சபலமென்றுள் - அறிவினர் காண
- ஞானவெளியிடை மேவுமுயிராய்.
     (பொ - ள்) ஆறாதுங் கடந்த அந்நிலையிலுள்ள சிவபெருமான் கட்புலனாகாத அருவமென்னும் நிலையினையுடையவனும் அல்லன். உள்ளே என்பதும் வெளியே என்பதும் அவன் அங்கே இருக்கின்றான் என்பதும் இங்கே இருக்கின்றான் என்பதும் சொல்வதற்கும் இடமில்லாமல், ஒழுங்கு முறையில் தவிர்தலில்லாமல், தனக்கென வோர் அடையாளமும் வரையறுத்துத் தனக்கென வோர் குணமும் இல்லாமல் குறைந்திருந்து நிறைகிறதும், நிறைந்திருந்து குறைகிறதும் இல்லாமல், போக்குவரவுமில்லாமல் உயர்ந்து, பசு பாசங்களைக் காட்டிலும் மேன்மையுற வளர்ந்து ஊதியம்ஊதியம் என்று உள்ளத்தில் எண்ணுகின்ற அறிஞர்கள் திருவருளைக்கொண்டு காட்சிபெறும்படி திருச்சிற்றம்பலம் எனப்படும் அறிவு வெளியில் எழுந்தருளிருக்கின்ற பேருயிராகிய பரமான் மாவாகி,

அனலொன் றிடவெரிந்து புகைமண் டிடுவதன்று
    புனலொன் றிடவமிழ்ந்து - மடிவில தூதை
     சருவும் பொழுதுயர்ந்து சலனம் படுவதன்று
        சமர்கொண் டழிவதன்றோர் - இயல்பின தாகும்
அவனென் பதுவுமன்றியவளென் பதுவுமன்றி
    யதுவென் பதுவுமன்றி - எழில்கொ டுலாவும்
         - ஆருமிலையறி யாதபடியே,
     (பொ - ள்) அப் பரமான்மா, நெருப்புச் சூழ எரியுள் நின்று புகை மிகுவதுமல்ல, நீரானது சூழ அதனுள் அழுந்தி அழிவில்லாதது; காற்று மோதும்போது மேலெழும்பி அசைவினையுடையதுமல்ல; போரினால் மடிவதுமல்ல, எக்காலத்தும் ஒரே தன்மையுடையது. அவன் என ஆணாகச் சுட்டியறிவதற்கு இயலாமலும் அவள் எனப் பெண்ணாகச் சுட்டியறிவதற்கு இயலாமலும் அதுவென்று சுட்டிக் கூறுவதற்கு இயலாமலும் எத்தகையினரும் அவ் விழுமிய முழுமுதல்வனின் உண்மை நிலைமையை அறியாவண்ணம் திருவருளாகிய எழில் கொண்டு யாண்டும் உலாவும், ஊதை - காற்று.

இருளென் பதுவுமன்றி யொளியென் பதுவுமன்றி
    எவையுந் தனுளடங்க - ஒருமுத லாகும்
     உளதென் பதுவுமன்றி இலதென் பதுவுமன்றி
        உலகந் தொழவிருந்த - அயன்முத லோர்கள்
எவருங் கவலைகொண்டு சமயங் களில்விழுந்து
     சுழலும் பொழுதிரங்கி - யருள்செயு மாறு
         - கூறரியசக மாயையறவே.