பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


690


அதுவே நிறைந்த இன்பமென நினைத்தே, துன்பம் இல்லையென்று அவ் வாழ்க்கையினை விட்டு நீங்காவகை, உரிமை பாராட்டி வளர்த்தற்கு ஆதரவாகக் கூடிய பேரன்பும் அமைத்து,

    "ஊக...கோடி" - உய்த்துணர்வில்லாமலே உடம்பானது ஆன்மாவாகிய நான் என அறிவடைந்ததுபோன்று அறியாமையை விளங்கப் பண்ணிக் காலப்பாகுபாட்டினையும், அவற்றிற்குரிய ஒழுங்குகளையும், காண்பித்தருளி, இன்னமும் இருவினைப் பயன்களை ஒருவாறு நுகரும் வண்ணம் இருள் செறிந்த நரகங்களையும், ஒளி பொருந்திய துறக்கங்களையும் பொருந்தும் வகையாக, மயக்கம் நீங்கும்படி வகுத்தருளினை. அடங்காத ஆசையினையுடைய சமய கோடிகள் தத்தமக்குப் பொருந்தும் வண்ணம்,

    "அறம்பொரு...எங்குமாகி" - அறம்பொருள் இன்பம் வீடென்னும் நான்கும், உறுதியாகிய நிலைமையால் ஆசாரியராக வந்து அவற்றை அறிவுறுத்தி, ஒருவரைப் போலவே எல்லாச் சமயத்தினரும், தங்கள் தங்கள் சமய முடிவுகளே வீடுபேற்றின் முடிவென, அளவை முறையான வழக்குகளும், அவரவர் கன்மத்திற்கேற்ற அறிவு நூல்களும் நிறைவாகக் காட்டி, தங்கள் உள்ளங்களில் குறைவில்லாமல், விளங்கும்படி, அவரவர் சமயங்களில் அவரவர் எண்ணப்படி எழுந்தருளி நின்றனை.

    "எங்குமாகி...கடனே" - எவ்விடத்தும் நீக்கமற நிறைந்து, சமயங்களை எல்லாங் கடந்து நிற்கும் தன்மையுடையவனாகித் தேவர் முதலிய யாவர்களும், முனிவர்களும் தங்களை அன்புடன் அடிமைகளாகக் கொடுத் தொப்புவித்து, அடியேங்களை ஆட்கொண்டருள வேண்டுமென்ன அருளுணவு உண்ணக் கிடையாது இளைத்திருக்க, குற்றமற்ற சிவஞான நிலையாகிய ஞானம் இல்லாதவனாகிய அடியேனுக்கு எளியேன் பக்குவத்திற்கேற்ற திருவருள் நிலையும் கூட்டி வைத்தல், தேவரீருடைய திருவருளினுக்குத் தீராக் கடமையாகும்.

     (வி - ம்) நால்வகைத் தோற்றம்; கருப்பையே முட்டை கழி வியர்வை வித்தென், றுருப்பெறுதல் நான்காம் உணர்.

ஏழுவகைப் பிறப்பு : 1. மரஞ்செடி கொடி முதலிய தாவரங்கள் 2. ஊர்வன 3. அமரர் 4. நீர்வாழ்வன 5. பறவை 6. நாற்காலின 7. மானிடர் 1 என்பன.

 
அருவென் பனவுமன்றி யுருவென் பனவுமின்றி
    அகமும் புறமுமின்றி - முறைபிற ழாது
     குறியுங் குடிணமுமன்றி நிறைவுங் குறைவுமன்றி
        மறையொன் றெனவிளம்ப - விமலம தாகி
 
 1. 
'தோற்றியிடும்.' சிவப்பிரகாசம், 47.