பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


693


இனிய சொற்களைக் கேட்கத் துணிந்து, அம் மங்கையர் கூந்தலுக்கு அழகுண்டாகும்படி பல மலர் மாலை வகைகளைச் சூடி யுடனே,

பதுமந் தனை இசைந்த முலையென் றதையுகந்து
     வரிவண்டெனவுழன்று - கலிலென வாடுஞ்
        சிறுகிண் கிணிசிலம்பு புனைதண் டைகள்முழங்கும்
         ஒலிநன் றெனமகிழ்ந்து - செவிகொள நாசி
பசுமஞ் சளின்வியந்த மணமுந் திடமுகந்து
பலமுஞ் சிடவிறைஞ்சி - வரிசையினூடு
     - காலில் மிசைமுடி சூடிமயலாய்.
     (பொ - ள்) தாமரையின் அரும்பினை யொத்த முலையென்று அதனை விரும்பி, வரிகளையுடைய வண்டினைப் போல, அதனைச் சூழ்ந்தலைந்து, கலீர் என்று ஒலிக்கும்படி அசைந்தாடுகின்ற சிறிய கிண்கிணிகளும், சிலம்புகளும், அழகு செய்யப்பட்ட தண்டைகளும் ஒலிக்கின்ற ஓசையினை காதுக்கினிதென்று கேட்க மனமகிழ்ந்து செவி ஏற்க, அவர் அணிந்துள்ள பசுமையாகிய மஞ்சளினுடைய புகழத்தக்க நறுமணத்தை மூக்கு ஏற்க, அவர்தம் அடி முடியிற் சூடி மையல் கொண்டு,

மருளுந் தெருளும்வந்து கதியென் பதைமறந்து
        மதனன் சலதி பொங்க - இரணம தான
         அளிபுண் தனைவளைந்து விரல்கொண் டுறவளைந்து
            சுரதஞ் சுகமிதென்று - பரவச மாகி
     மருவுந் தொழில்மிகுந்து தினமுந் தினமும்விஞ்சி
     வளரும் பிறைகுறைந்த - படிமதி சோர
         - வானரமதென மேனிதிரையாய்,
     (பொ - ள்) மயக்கத்தினின்றும் சிறிது தெளிவு முண்டாகிச் சிவகதி என்பதனை மறந்து, காமக்கடல் பொங்க, மெய்யுணர்வினர் புண்ணென்று எண்ணத் தகுந்த பெண்ணுடம்பாகிய அளிந்த புண்ணை நெருங்கி விரல்களாற்றொட்டுப் புணர்ச்சியால் வரும் இதுவே மிகுந்த இன்பமென்று பரவசப்பட்டுக் கூடுங்கலையில் மிஞ்சி நாளும் நாளும் பெருகி வளரும் திங்கள் நாளுக்கு நாள் தலை குறைந்தாற் போல அறிவு சோர உடம்பு குரங்கினுடலைப் போன்று கூனித்திரைந்து,

வயதும் படஎழுந்து பிணியுந் திமிதிமென்று
     வரவுஞ் செயலழிந்துள் - இருமலு மாகி
        அனமுஞ் செலுதலின்றி விழியுஞ் சு டர்களின்று
      முகமுங் களைகளின்று - சரியென நாடி